Nilavuku Enmel Ennadi Kobam Review : தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

பா.பாண்டி, ராயன் படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷின் அக்கா மகன், இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் நாயகியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். இதுதவிர மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் முதல் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Theatre Release Movies : காத்துவாங்கும் விடாமுயற்சி; பிப்ரவரி 21ந் தேதி கலெக்‌ஷன் அள்ள வரும் படங்கள் இத்தனையா?

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் மூலம் ஒரு இயக்குனராக தனுஷுக்கு இன்னொரு வெற்றி கிடைத்துள்ளது. ஃபன்னான ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூட வழக்கமான காதல் படம். கிளைமாக்ஸ் ஃபன் ஆக உள்ளார். பவிஷ் தனியாக தெரிகிறார். சில இடங்களில் இளம் வயது தனுஷை நினைவூட்டுகிறார். மேத்யூ தாமஸ் சிரிக்க வைக்கிறார். நாயகிகள் அனிகா, ரபியா, ரம்யா சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷின் இசை அருமை. ஜென் சி கிட்ஸுக்காக ஃபன்னான ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை கொடுத்துள்ளார். அனைவரும் பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

தனுஷ் இஸ் பேக். ஜிவி பிரகாஷ் தன்னுடைய பின்னணி இசையால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். கதாபாத்திர தேர்வு கச்சிதமாக உள்ளது. டல் அடிக்கும் காட்சிகள் படத்தில் ஒன்றுகூட இல்லை. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்றென்றும் மனதில் நிலைத்திருக்கும். நீக் இரண்டாம் பாகம் லோடிங் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஒரு இயக்குனராக தனுஷ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பா பாண்டிக்கு பின் ஒரு மென்மையான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஒரு இயக்குனராக 2கே கிட்ஸின் அணுகுமுறையை அவர்களின் காதல் முறிவை சிறப்பாக காட்டி இருக்கிறார். அதேபோல் ஆங்காங்கே வரும் ஒன்லைன் பஞ்ச் நகைச்சுவைகளும் ரசிக்கும்படி உள்ளன. முதல்பாதியில் சில தேவையில்லாத காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி மனதுக்கு நிறைவாக இருந்தது. பவிஷ் மற்றும் மேத்யூ தாமஸ் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. குறிப்பாக அவர்கள் ஆடும் பிரேக் அப் டான்ஸ் தியேட்டரில் அதகளப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேத்யூ தாமஸ் என்ன ஒரு வைப் கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசையும் அருமை. தனுஷ் சொன்ன மாதிரி, இது வழக்கமான காதல் கதை தான், ஆனால் கியூட்டான அழுத்தமான காட்சிகள் நிரம்பி உள்ளன என குறிப்பிட்டு உள்ளார்.

Scroll to load tweet…

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் முழுக்க முழுக்க நகைச்சுவை பொழுதுபோக்கு நிறைந்த படம். தனுஷ் என்ன சொன்னாரோ அதை கொடுத்திருக்கிறார். வழக்கமான காதல் கதையை அனைவருக்கும் பிடிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே தனுஷ் படத்தைவிட டபுள் மடங்கு வசூல்; மாஸ் காட்டும் டிராகன்!