- Home
- Cinema
- Theatre Release Movies : காத்துவாங்கும் விடாமுயற்சி; பிப்ரவரி 21ந் தேதி கலெக்ஷன் அள்ள வரும் படங்கள் இத்தனையா?
Theatre Release Movies : காத்துவாங்கும் விடாமுயற்சி; பிப்ரவரி 21ந் தேதி கலெக்ஷன் அள்ள வரும் படங்கள் இத்தனையா?
தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் மூலம் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் வரை பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.

பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள்
தமிழ் சினிமாவுக்கு ஜனவரி மாதம் சொதப்பலாக அமைந்த நிலையில், பிப்ரவரி மாதம் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த மாதம் வரிசையாக பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு காத்திருந்தன. அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வசூலில் சொதப்பியது. 2 வாரங்களைக் கடந்தும் இப்படம் 150 கோடியை எட்டவில்லை. சரி காதலர் தினத்திற்கு வந்த படங்களாவது பிக் அப் ஆகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி தொடர்ந்து தமிழ் படங்கள் சொதப்பி வரும் நிலையில், அதற்கு இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் எண்டு கார்டு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிராகன்
லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் டிராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. சுமார் 37 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... என்னை பல ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணுனாங்க; வேதனையை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
டிராகன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள மற்றோரு படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக குட்டி நயன் அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். ராயன் படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் இயக்கிய படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படமும் பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வருகிறது.
ராமம் ராகவம்
பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வர உள்ள மற்றோரு திரைப்படம் தான் ராமம் ராகவம். இப்படத்தை தன்ராஜ் கோரனானி இயக்கி உள்ளார். இப்படத்தில் சமுத்துரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அர்ஜுன் சிலுவெரு இசையமைத்து உள்ளார். துர்க பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக மார்தண்ட் வெங்கடேஷ் பணியாற்றி இருக்கிறார். இப்படமும் பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு நோ சொல்லிவிட்டு; தனுஷுக்கு ஓகே சொன்ன அனிருத்!