10:34 PM (IST) Dec 24

Tamil News Live கம்மி விலையில் அதிக இட வசதியுடன் வரக்கூடிய பட்ஜெட் கார்கள்

வார இறுதிப் பயணங்களுக்கும், அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கும் ஏற்ற, பெரிய பூட் ஸ்பேஸ் கொண்ட கார்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த மாடல்களின் பூட் ஸ்பேஸ், விலை மற்றும் பிற அம்சங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

Read Full Story
10:28 PM (IST) Dec 24

Tamil News Live விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை

விஜய் ஹசாரே டிராபியில் மீண்டும் களமிறங்கிய விராட் கோலி, டெல்லிக்காக 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். மேலும், 16,000 லிஸ்ட்-ஏ ரன்களைக் கடந்து, சச்சினுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

Read Full Story
10:20 PM (IST) Dec 24

Tamil News Live தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மோதல்கள் நடந்து வரும் நிலையில், விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. தாய்லாந்து படையினர் சிலையை இடித்ததாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story
10:05 PM (IST) Dec 24

Tamil News Live நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு

நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹனீபாவும், கலைஞருக்கும் இடையேயான நட்பு நகமும், சதையும் போல் இருந்ததாக பேசினார்.

Read Full Story
09:54 PM (IST) Dec 24

Tamil News Live TN Govt Job - மாதம் ரூ.35,400 ஆரம்ப சம்பளம்! உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை!

TN Govt Job TANUVAS-ல் உதவியாளர், ஓட்டுநர் உட்பட 60 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10, 12-ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
09:50 PM (IST) Dec 24

Tamil News Live திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவுப் பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Read Full Story
09:50 PM (IST) Dec 24

Tamil News Live மத்திய அரசு வேலை கனவா? ரயில்வேயில் 22,000 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

RRB Recruitment ரயில்வேயில் 22,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு! 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000. கடைசி தேதி 20.02.2026.

Read Full Story
09:35 PM (IST) Dec 24

Tamil News Live உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!

கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற தீர்க்கதரிசி, டிசம்பர் 25 முதல் பெருவெள்ளத்தால் உலகம் அழியும் என கணித்துள்ளார். இதை நம்பி பலர் தங்கள் சொத்துக்களை விற்று, அவர் கட்டும் பிரம்மாண்ட படகுகளில் தஞ்சம் புக முயல்கின்றனர்.

Read Full Story
09:20 PM (IST) Dec 24

Tamil News Live தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!

மர்மம் என்னவென்றால் தினந்தோறும் சுவீட் பாக்ஸ்கள் மணல் மாஃபியாக்களிடம் இருந்து இவர்களுக்கு சென்று விடுகிறது. சட்ட மன்றத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதற்கான செலவுக்கு பணத்தை இப்படியெல்லாம் கொள்ளையடித்து சேர்த்து வருகிறார்களாம்.

Read Full Story
09:02 PM (IST) Dec 24

Tamil News Live சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!

பிரபல இந்திய பயண யூடியூபரான அனந்த் மிட்டல், சீனா சென்றபோது குவாங்சோ விமான நிலையத்தில் 15 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அருணாச்சல பிரதேசம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோக்களே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Read Full Story
08:59 PM (IST) Dec 24

Tamil News Live ரிசல்ட் வந்துடுச்சு! IBPS RRB PO தேர்வில் நீங்கள் பாஸ் ஆ? மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி?

IBPS RRB PO முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ibps.in தளத்தில் வெளியானது. ஸ்கோர் கார்டை (Scorecard) டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே.

Read Full Story
08:54 PM (IST) Dec 24

Tamil News Live 'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்

ஓட்டுநர்களுடன் லாபம் பகிரப்படும் 'பாரத் டாக்ஸி' சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். பஞ்ச்குலாவில் பேசிய அவர், உணவுப் பாதுகாப்பு, விளையாட்டு மற்றும் ஆயுதப் படைகளுக்கு ஹரியானா ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.
Read Full Story
08:30 PM (IST) Dec 24

Tamil News Live நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும் - கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!

Karthik Master Plan Against Chamundeshwari Court Order Twist Highlights : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய 1070ஆவது எபிசோடிற்கான புரோமோ வீடியோவில் மாமியார் வீட்டிற்கு கார்த்திக் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Read Full Story
08:20 PM (IST) Dec 24

Tamil News Live இனி 'டுபாக்கூர்' வேலை நடக்காது! NEET, JEE தேர்வில் NTA-வின் அதிரடி மாற்றம் - மாணவர்களே உஷார்!

NTA ஆள்மாறாட்டத்தைத் தடுக்க 2026 முதல் NEET, JEE தேர்வுகளில் ஆதார் மூலம் முகத்தை அடையாளம் காணும் முறை (Facial Recognition) அமல்படுத்தப்பட உள்ளது.

Read Full Story
08:12 PM (IST) Dec 24

Tamil News Live கிறிஸ்துமஸ் கிஃப்ட் வாங்கலையா? கவலையே விடுங்க.. கடைசி நேரத்தில் கைக்கொடுக்கும் 5 சூப்பர் கேட்ஜெட்ஸ்!

Christmas 2025 கடைசி நேர கிறிஸ்துமஸ் பரிசு தேடுகிறீர்களா? Realme, OnePlus, Samsung உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்ப பரிசுகளின் பட்டியல் இதோ.

Read Full Story
08:04 PM (IST) Dec 24

Tamil News Live ஸ்மார்ட்போன் முதல் வாஷிங் மெஷின் வரை.. 2025-ல் இந்தியாவை கலக்கிய AI தொழில்நுட்பம் - ஒரு பார்வை!

Top AI gadgets 2025-ல் இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்திய சிறந்த AI கேட்ஜெட்டுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் ஹோம் வரை!

Read Full Story
07:55 PM (IST) Dec 24

Tamil News Live Christmas 2025 - ரூ.1000 இருந்தால் போதும்.. கிறிஸ்துமஸ் பிளான் ஓவர்! நண்பர்களை அசத்த 4 சூப்பர் ஐடியாக்கள்!

Christmas 2025 கிறிஸ்துமஸ் மற்றும் சீக்ரெட் சாண்டாவிற்கு ரூ.1000-க்குள் சிறந்த பரிசுகளைத் தேடுகிறீர்களா? ஜியோ டேக் முதல் இயர்பட்ஸ் வரை பட்ஜெட் கிஃப்ட் பட்டியல் இதோ!

Read Full Story
07:45 PM (IST) Dec 24

Tamil News Live உங்கள் போனில் இந்த வசதி இருக்கா? அவசர காலத்தில் உயிரை காப்பாற்றும் கூகுள் ELS - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Google கூகுள் இந்தியாவில் ELS சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர காலங்களில் 112-க்கு அழைக்கும்போது துல்லியமான இருப்பிடத்தை இது பகிரும்.

Read Full Story
07:40 PM (IST) Dec 24

Tamil News Live TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக உரிமை மீட்பு கழகத்தின் 90 சதவீத மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story
07:31 PM (IST) Dec 24

Tamil News Live இப்ப பிரியங்கா காந்தி பிரதமரா இருந்தா நடக்குறதே வேற.. காங். கட்சிக்குள் குண்டு வீசிய மூத்த எம்.பி.!

காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், பிரியங்கா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்றும், அவர் இந்திரா காந்தியைப் போல வலிமையான தலைவர் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து, ராகுல் காந்தி மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

Read Full Story