09:19 AM (IST) Dec 29

Tamil News Live todayடீக்கடையில் போண்டா கட்ட பயன்படும் உங்களுடன் ஸ்டாலின் மனுகள்.. கொந்தளித்த இபிஎஸ்

பொதுமக்களிடம் இருந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆறுகளில் வீசப்படுவதோடு டீக்கடைகளில் போண்டா மடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனையோடு தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:10 AM (IST) Dec 29

Tamil News Live todayXUV 7XO-வில் 540° கேமரா.. மூன்று ஸ்கிரீன், AI சிஸ்டம்.. மஹிந்திராவின் மாஸ்டர் மூவ்

மஹிந்திரா தனது புதிய XUV 7XO எஸ்யூவியை ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது XUV700-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக, 540-டிகிரி கேமரா, மூன்று டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.

Read Full Story
09:06 AM (IST) Dec 29

Tamil News Live todayரோகிணியின் கழுத்தை நெரித்த மனோஜ்.... பூதாகரமாக வெடித்த சொத்து பிரச்சனை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் சொத்து பிரச்சனை தற்போது வெடித்துள்ளது. மனோஜ் தனக்கான சொத்தை பிரித்து தந்துவிடுமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:44 AM (IST) Dec 29

Tamil News Live todayலண்டனில் KFC இனவெறி வழக்கு.. இந்திய ஊழியருக்கு ரூ.81 லட்சம் இழப்பீடு

லண்டனில் உள்ள KFC-ல் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதீஷ் ரவிச்சந்திரன், இனவெறி மற்றும் தவறான பணிநீக்கத்திற்கு உள்ளானார். அவரது மேலாளர் இனவெறி வார்த்தைகளால் அவமதித்ததாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

Read Full Story
08:28 AM (IST) Dec 29

Tamil News Live todayஎக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?

ஆந்திராவின் எலமஞ்சில்லி அருகே டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 158 பயணிகள் உயிர் தப்பினர்.

Read Full Story