- Home
- Cinema
- தொலைக்காட்சி
- காளியம்மா போட்ட ஸ்கெட்ச்; புருஷனுக்காக ரிஸ்க் எடுத்த சந்திரகலா: சிசிடிவி ஆதாரத்தில் சிக்குவாரா?
காளியம்மா போட்ட ஸ்கெட்ச்; புருஷனுக்காக ரிஸ்க் எடுத்த சந்திரகலா: சிசிடிவி ஆதாரத்தில் சிக்குவாரா?
chandrakala cctv evidence kaliyamma plan: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் தனது புருஷனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போவேன் என்று சந்திரகலா துணிந்துள்ளார்.

Karthigai Deepam Karthik and Chandrakala
கார்த்திகை தீபம் சீரியலில் தனது அக்காவையும், அவரது குடும்பத்தியும் பழி வாங்க வேண்டும் என்பதற்காக சந்திரகலா புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார். கூடவே இருந்து குழி பறிப்பார்கள் என்பார்களே அது சந்திகலாவிற்கு பொருந்தும். தனது அக்கா வீட்டிலேயே இருந்து கொண்டு அவரது குடும்பத்தை பழி வாங்க வேண்டுமே என்பதற்காகத்தான். கோயில் திருவிழாவை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி வீட்டிலிருக்கும் அம்மன் நகையை அம்மனுக்கு சாற்றி சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை அளிக்க ஊர் பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர்.
Zee Tamil Karthigai Deepam Latest News
அதன்படி, வீட்டு பூஜையறையில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகையை எடுத்து பார்த்தார்.அது பத்திரமாக இருந்தார். இதைத் தொடர்ந்து நகையை ஆட்டைய போட, காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல் ஆகியோருடன் சேர்ந்து பிளான் போடுகிறார். ஆனாலும், கொஞ்சம் பீதி தான். ஏனென்றால் வீட்டில் சிசிடிவி கேமரா வேறு பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் இல்லாமல் இப்போது வீட்டில் டிரைவர் வேறு இருக்கான்.
Chandrakala vs Kaliyamma Twist
அதான் கொஞ்சம் பயமாக இருக்கு என்று சொல்லவே, உன்னுடைய புருஷனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டுமா இல்லையா என்று காளியம்மாள் கேட்கவே என்னுடைய புருஷனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் எந்த ரிஸ்க்கும் எடுப்பேன் என்று சொல்லி வீட்டிலிருந்த சாமி நகையை புகைப்படம் எடுத்து தனது கணவர் செல்லுக்கு அனுப்பினார்.
Karthigai Deepam Serial Today Episode
இதைத் தொடர்ந்து சிவனாண்டி புதிதாக அம்மனுக்கு டூப்ளிகேட் நகையை செய்து, அதனை உண்மையான நகை மாதிரி காண்பித்து அம்மனுக்கு அணிய திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் கான்ஸ்டபிளின் மனைவியை தேடி கார்த்திக் அலைந்து கொண்டிருக்கிறார். அவர் வீட்டில் வேறு இல்லை. என்ன செய்ய போகிறார்? தனது அத்தையை காப்பாற்றுவாரா கார்த்திக்? அடுத்து என்ன நடக்கிறாது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.