Riddhi Kumar Prabhas Gift Saree : நடிகர் பிரபாஸ் பரிசாக கொடுத்த நடிகையை கிட்டத்தட்ட 3 ஆண்டுகாலமாக ஒரு நடிகை பத்திரமாக வைத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யார் அந்த நடிகை என்ன நடந்தது என்று பார்க்காலம்.

பிரபாஸ் ஒரு நடிகைக்கு புடவை பரிசளித்தாரா? அந்தப் புடவையை அந்த நடிகை மூன்று வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தாரா? அந்தப் புடவையை அவர் எப்போது கட்டினார் தெரியுமா? யார் அந்த நடிகை? என்ன அந்த புடவையின் கதை? பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் லேட்டஸ்ட் திரைப்படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் நிகழ்வுக்குப் பிறகு இது மேலும் அதிகரித்துள்ளது. 

காமெடி படங்களின் இயக்குனர் என பெயர் பெற்ற மாருதி இயக்கும் இப்படத்தை, பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரபாஸ் தனது சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக ஹாரர் மற்றும் காமெடி ஜானரில் நடிப்பதால், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 'ராஜா சாப்' திரைப்படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதி சங்கராந்தி விருந்தாக வெளியாக உள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சமீபத்தில் 'தி ராஜா சாப்' ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தினர். ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் பிரபாஸ் ரசிகர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். மேடையில் நடந்த உரைகள், வீடியோக்கள், கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்வில், 'ராஜா சாப்' கதாநாயகிகளில் ஒருவரான ரித்தி குமார் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. மேடையில் பேசிய ரித்தி குமார், “பிரபாஸ் சாருடன் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு புடவையை பரிசாக கொடுத்தார். அது எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதனால்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு பிரபாஸ் கொடுத்த அந்தப் புடவையிலேயே வந்திருக்கிறேன்” என்றார். பிரபாஸ் ஒரு நடிகைக்கு புடவை பரிசளிப்பதா? அதை மூன்று வருடங்களாக பாதுகாத்து, ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அதையே அணிந்து வருவதா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ரித்தி குமாரின் பேச்சைக் கேட்டதும், அங்கிருந்த பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். பிரபாஸ்.. பிரபாஸ்.. என கோஷமிட்டனர். இந்த வீடியோவை ரெபல் ரசிகர்கள் மேலும் வைரலாக்கி வருகின்றனர். இதற்கிடையில், அவரது திருமணம் குறித்தும் ரசிகர்களிடமிருந்து கேள்விகள் எழுகின்றன. தங்களுக்குப் பிடித்த ஹீரோவுக்கு 50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரபாஸின் திருமணம் குறித்து ஏற்கனவே பல்வேறு செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆனால், உண்மையான தகவலை இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.