Asianet News TamilAsianet News Tamil

நாகையில் 340 விசைப் படகுகளுக்கு மானிய விலை டீசல் ரத்து; ஆத்திரத்தில் விற்பனை நிலையத்திற்கு பூட்டுபோட்ட மீனவர்கள்...

subsidy Diesel cancellation for 340 boats fishermen locked shop ...
subsidy Diesel cancellation for 340 boats fishermen locked shop ...
Author
First Published Jul 4, 2018, 9:01 AM IST


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் 340 விசைப் படகுகளுக்கு மானிய விலை டீசல் ரத்து செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த மீனவர்கள், நாகையில் உள்ள அரசு டீசல் விற்பனை நிலையத்தை பூட்டுபோட்டனர். 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 14-ஆம் தேதியோடு முடிவடைந்ததைது, அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான நாகப்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர். 

இதில் நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 340 விசைப்படகுகள் தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே மீன்பிடிக்க சென்றதாக கூறி விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை அபராதம் விதித்து திடீரென சுற்றறிக்கை அனுப்பியது.

மேலும், இந்த 340 விசைப் படகுகளுக்கும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலையும் வழங்காமல் நாகப்பட்டினம் மீன்வளத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைத்தள்ளனர். இந்த நடவடிக்கையால் எமானிய விலை டீசல் கிடைக்காமல் தவித்த 340 விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த நாகை மீனவர்கள் சம்பவத்தன்று கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையத்தை இழுத்து பூட்டினர். இதனால் அங்கு வழக்கம்போல் டீசல் இறக்கவந்த டேங்கர் லாரிகள் டீசல் இறக்க முடியாமல் திரும்பிச் சென்றன. டீசல் விற்பனை நிலையத்திற்கு மீனவர்கள் பூட்டுப்போட்டதால் மற்ற படகுகளுக்கும் டீசல் நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

"340 விசைப்படகுகளுக்கு மானிய விலை டீசல் வழங்காததால் மீனவர்களுக்கு சுமார் ரூ.43 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அரசுக்கும், மீனவர்களுக்கும் உள்ள உறவை மீன்வளத்துறை அதிகாரிகள் துண்டிக்க நினைப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

எனவே, மானிய டீசல் விவகாரத்தில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை வழங்குவதுடன், இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக தீர்வு காண வேண்டும்" என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  


 

Follow Us:
Download App:
  • android
  • ios