தென்மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்: போக்குவரத்து துறை
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. SETC , TNSTC , PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
கோயம்பேடு மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. பேருந்துகள் எளிதாக வந்துசெல்ல வசதியாக 88.52 ஏக்கர் பரப்பில் இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.394 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்து வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கடந்த 12ஆம் தேதி பேருந்து நிலையத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொண்டு முதற்கட்ட சோதனை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் பிற மாவட்ட பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகளுடன் ஆம்னி பேருந்துகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (டிசம்பர் 30) முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. SETC, TNSTC, PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இணைப்புப் பேருந்துகள்:
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வண்டலூர் உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 70V, 70C, 104CCT பேருந்து 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு 55V, M18 எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு 91R எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 95X எண் கொண்ட பேருந்து 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து அடையாறு இடையே 99X எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே இடையே 21G எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள்:
இந்த பேருந்து நிலையத்தில் தினமும் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகினது. பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, உணவகங்கள், 100 கடைகள் சுத்திகரிப்பு அமைப்புகள், 24 மணிநேர குடிநீர் வசதி, கழிவறைகள் என பல வசதிகள் உள்ளன.
பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் இரண்டு தளங்கள் கொண்ட பார்க்கிங் வசதி உள்ளது. முதல் தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி இருக்கிறது. இரண்டாவது தளத்தில் 84 கார்கள் மற்று 2,230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
உச்ச நீதிமன்றம் சொன்னது மனசுல இருக்கட்டும்... ஆளுநருக்குச் செக் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!