உச்ச நீதிமன்றம் சொன்னது மனசுல இருக்கட்டும்... ஆளுநருக்குச் செக் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை மனதில்கொண்டு, ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், இன்று மாலை ஆளுநரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரும் முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை மனதில்கொண்டு, ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
20 மசோதாக்களை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
அதில், "ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தினார்" என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திரு. கே.சி. வீரமணி மற்றும் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.
இதில் கே.சி. வீரமணி தொடர்பான கோப்பு 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் அவர்கள் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ளது. அது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்து ஒப்புதல் கோரப்பட்டது.
இத்துடன், அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் அவர்களது செயல்பாடு அமையும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை மனதில்கொண்டு, ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டும் எனவும் வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
உலகமே அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காகக் காத்திருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்