உலகமே அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காகக் காத்திருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

"இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், தனது பாரம்பரியத்தைப் பேண வேண்டும்" என்று பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

Whole world waiting for Ram temple consecration on January 22: PM Modi in Ayodhya sgb

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள பிரமாண்டமான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஒரு வரலாற்று தருணம் என்றும் அதற்காக உலகமே காத்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அயோத்தி சென்றிருக்கும் பிரதமர் மோடி 15,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அயோத்தி விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அயோத்தி நகரம் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பதாகக் கூறினார்.

ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, "இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், தனது பாரம்பரியத்தைப் பேண வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.

அயோத்தியில் பிரம்மாண்ட வீணையை கண்டு ரசித்த பிரதமர் மோடி!

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி நகரத்திற்குச் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார், அழைக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறிய பிரதமர், அனைத்து குடிமக்களும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.

Whole world waiting for Ram temple consecration on January 22: PM Modi in Ayodhya sgb

மேலும், ஜனவரி 14 முதல் ஜனவரி 22 வரை நாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்கள் மற்றும் கோயில்களில் தூய்மை செய்யும் இயக்கத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டார். ராம் லாலாவின் இருப்பிடத்தைக் கூடாரத்திலிருந்து நிரந்தரமான அமைப்பாக மாற்றியிருப்பதாக தெரிவித்தார். "இவ்வளவு நாள் ராம் லாலா கூடாரத்தில் இருந்தார். இன்று ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் நான்கு கோடி ஏழைகளுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

"இன்று, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, திறப்பு விழா நடந்தது. நடைபெற்ற இருக்கும் உள்கட்டமைப்பு பணிகள், நாட்டின் வரைபடத்தில் மீண்டும் நவீன அயோத்தியை நிலைநாட்டும்" என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக, அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தைத் திறந்து வைத்த பிரதமர், 2 அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் 6 வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்.. ரயில்வேயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios