அயோத்தியில் பிரம்மாண்ட வீணையை கண்டு ரசித்த பிரதமர் மோடி!
ரூ.240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைத்திருக்கிறார். 8 புதிய ரயில்களையும் மோடி தொடங்கி வைத்தார்.
PM Modi in Ayodhya
அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி இன்று 8 புதிய ரயில்கள் உட்பட நாட்டிற்கான பல மெகா திட்டங்களைத் தொடங்கி வைத்து உள்ளார்.
PM Modi in Ayodhya
விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை வாகன பேரணி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
PM Modi in Ayodhya
பேரணிக்குப் பின்னர், ரூ.240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
PM Modi in Ayodhya
6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 2 அமிர்த பாரத் ரயில்கள் என மொத்தம் 8 புதிய ரயில்களை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
PM Modi in Ayodhya
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புது டெல்லி, அமிர்தசரஸ் - டெல்லி சந்திப்பு இடையேயான இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் இன்று பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டன.
PM Modi in Ayodhya
கோவை - பெங்களூரு இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
PM Modi in Ayodhya
ஜல்னா - மும்பை (CSMT), அயோத்தி - ஆனந்த் விஹார் டெர்மினல் டெல்லி, மங்களூரு - மட்கான் கோவா வந்தே பாரத் ரயில்களும் இன்று முதல் இயக்கபடுகின்றன.
PM Modi in Ayodhya
தர்பங்கா - ஆனந்த் விஹார் டெல்லி, மால்டா டவுன் - பெங்களூரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.
PM Modi in Ayodhya
வந்தே பாரத், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடங்கி வைத்த மோடி, அயோத்தியில் புதிய விமான நிலையத்தையும் திறந்து வைத்துள்ளார்.