20 மசோதாக்களை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக அரசு அனுப்பிய 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Governor RN Ravi sent 20 bills back to the President says Minister Raghupathi sgb

தமிழக அரசு அனுப்பிய 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநரும் முதல்வர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பரிந்துரை செய்தது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநர் - முதல்வர் இடையேயான சந்திப்பு சமுகமாக நடைபெற்றது என்று கூறினார்.

உலகமே அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காகக் காத்திருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்கும் மதிப்பு அளிக்கக்கூடியவர்; ஆளுநரும் முதல்வருக்கு நல்ல மரியாதை அளித்தார் என்று தெரிவித்தார். பின்னர் தமிழக அரசின் மசோதாக்கள் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், தமிழக அரசு இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களில் 20 மசோதாக்களை ஆளுநர் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கே அனுப்பியுள்ளார் என்றார்.

ஒரு மசோதா மட்டும் ஆளுநர் வசம் உள்ளது. வேளாண் விளைபொருள் சட்ட முன்வடிவு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான 49 கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள எனவும் தெரிவித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளவும் அனுமதி கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்குமா இருக்காதா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios