Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்குமா இருக்காதா?

சென்னையில் பேருந்து நிலையங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது கோடம்பாக்கம் பேருந்து நிலையம் விஷயத்திலும் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Will Koyambedu bus station in Chennai survive after 15 years sgb
Author
First Published Dec 30, 2023, 4:49 PM IST

சென்னையில் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மாறிவருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வருகையால் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையுடன் தோன்றிய கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பு சென்னை பாரிஸ் கார்னரில் தான் வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதற்கான பேருந்து நிலையம் இருந்தது. அண்ணா சாலை வழியாகவே இந்த பேருந்து நிலையத்திற்கு நகரப் பேருந்துகள் இருந்தன. அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததன் எதிரொலியாக, 2003ஆம் ஆண்டில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தது.

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோயம்பேடு பேருந்த நிலையம் உதவியது. கொத்தவால் சாவடியில் இருந்த மார்க்கெட்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. கோயம்பேடு நகரின் மையப்பகுதியாக இருப்பதால், வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் பேருந்து நிலையம் செல்ல வசதியாக இருக்கிறது. காலப்போக்கில் ஜவஹர்லால் நேரு சாலையில் போகுக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

மக்கள் குஷியோ குஷி.. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

Will Koyambedu bus station in Chennai survive after 15 years sgb

ஜிஎஸ்டி சாலை அதைவிட கடுமையான மோசமான வாகன நெரிசலை சந்தித்து வருகிறது. குரோம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கம் செல்ல மேம்பாலம் வந்த பின்பும், போக்குவரத்து நெரிசலில் திணற வேண்டி இருக்கிறது. ஈபக் ஹவர் நேரங்களில் வாகனங்களை ஓட்ட இயலாத அளவுக்கு போக்குவரத்து அதிகமாகி இருக்கிறது.

பிரச்சனைக்குத் முடிவு காண்பதற்காக தமிழக அரசு வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டது. 2018ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கின. ரூ.397 கோடி செலவில் 88.52 ஏக்கர் பரப்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாகியுள்ளது.

இன்று திறப்பு விழா காணும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் எந்த பகுதிக்கும் சென்றுவரலாம். கிளாம்பாக்கம் பேருந்துகள் நேராக உள்ளே வர பால் இல்லை. ரயில் நிலையமும் இல்லை. வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் வழியாகத்தான் வர வேண்டும்.

சென்னையில் பேருந்து நிலையங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது கோடம்பாக்கம் பேருந்து நிலையம் விஷயத்திலும் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ரூ.85,000 கோடிக்கு நலத்திட்டங்கள்! அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக மாறப்போகும் அயோத்தி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios