மக்கள் குஷியோ குஷி.. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இன்று (டிசம்பர் 30ல்) திறந்து வைக்க உள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பஸ் நிலையம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்து. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.400 கோடி மதிப்பீட்டில் இப்பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற, பொங்கல் பண்டிகையின் பொழுது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற 30ஆம் தேதி திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதற்காக பிரம்மாண்ட குத்து விளக்கு மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..