Asianet News TamilAsianet News Tamil

2 நாட்களுக்கு இந்த 12 மாவட்டங்களில் சும்மா மழை வெளுத்து வாங்கப் போகுதாம் !! வேலூரில் ஒரே நாளில் 15 செ.மீ. அடிச்சு ஊத்தியது !!

தமிழக வளி மண்டல பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் அடுத்த இரண்டு நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain in tmilnadu next 2 days
Author
Chennai, First Published Aug 19, 2019, 7:03 AM IST

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, வட மாநிலங்களிலும், தெற்கில், கேரளா மற்றும் கர்நாடகாவிலும், வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக தமிழகத்திலும், தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்க்கிறது.

ஏற்கனவே, கர்நாடகாவில் பெய்த மழையால், அணைகள் நிரம்பி, காவிரியில், தமிழக பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கேரளாவில் பெய்த மழையால், கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள, அணைகள் நிரம்பியுள்ளன.

rain in tmilnadu next 2 days

மழையின்றி வறட்சியில் தவித்த வட மாவட்டங்களில், மூன்று நாட்களாக, பரவலாக மழை கொட்டுகிறது. தமிழகத்தின் வடகிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள, வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை கொட்டி வருகிறது.

வேலுாரில், கடந்த 24 மணி நேரத்தில், 17 செ.மீ., மழை பெய்தது. வேலுார் அருகேயுள்ள ஆலங்காயத்தில், 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.பல மாவட்டங்களில் பெய்யும் மழையால், ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். 

rain in tmilnadu next 2 days

இந்நிலையில் தமிழக வளி மண்டல பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக யால், இன்றும், நாளையும் வேலுார், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கடலுார், நாகை, திருவாரூர் ஆகிய, 12 மாவட்டங்களில், கனமழை பெய்யும் என சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain in tmilnadu next 2 days

இதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios