Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் இணைந்த கவியரசர் கண்ணதாசன் மகன்!

கவியரசர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பாஜகவில் இணைந்துள்ளார்

Lyricist Kannadasan son annadurai joined in bjp infront of annamalai
Author
First Published Jul 4, 2023, 5:00 PM IST

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மறைந்த கவியரசர் கண்ணதாசன். இவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், கவியரசர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் ஏற்கனவே நடிகர், நடிகைகள் ஏராளமானோர் உள்ளனர். தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் பாஜகவினர், உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாஜகவை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில்,கவியரசர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

2024 தேர்தல்: பாஜக புதிய மாநிலத் தலைவர்கள் நியமனம்!

திமுகவில் இருந்த கவியரசர் கண்ணதாசன் பேரறிஞர் அண்ணாவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி, காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் கண்ணதாசன் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சியாக இருக்கும் நிலையில், அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பாஜகவில் இணைந்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios