என்.டி.சி குழுமத்தின் தலைவர் டாக்டர் சந்திரமோகனுக்கு கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கொங்கு மாமணி விருது வழங்கப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஆன்மிக பங்களிப்பிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
Kongu Mamani Award :என்.டி.சி குழுமத்தின் தலைவர் டாக்டர் சந்திரமோகனுக்கு கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கொங்கு மாமணி விருதினை சவிதா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வீரையன் வழங்கி கெளரவித்தார். கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சாதனை விருதுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
அந்தவகையில், லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்திய அளவில் முதன்மை இடம் வகிப்பது மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அதிமாக வளர்ச்சி கண்டு வரும் என்.டி.சி குழுமத்திற்கு தலைவராகவும், திருச்சியில் சாய்பாபாவுக்கு என தனித்துவமான ஆலயத்தை நிறுவி தென்னக சீரடியை உருவாக்கி ஆன்மிக செம்மலாகவும், இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினராகவும் திகழும் டாக்டர் சந்திரமோகனுக்கு கொங்கு மாமணி விருது பெற தகுதியானவர் என தேர்வு செய்து, அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொங்கு மாமணி விருது
இந்த விருது வழங்கும் விழா சென்னை சவிதா கல்லூரியில் நடைபெற்றது. கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வீரையன் தலைமை வகித்தும், திரிவேணி குழுமத்தின் தலைவர் பாலசுப்பரமணியன் முன்னிலை வகித்தும், டாக்டர் சந்திரமோகனுக்கு கொங்கு மாமணி விருதினை வழங்கி கெளரவித்தார்கள். மேலும், மகேந்திரா அண்ட் மகேந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர். வேலுச்சாமிக்கும் கொங்கு மாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
