சந்திரயான்-3 வெற்றியால் பாகிஸ்தான் ஊடகங்கள் பொறாமையை கக்கி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
- Home
- Tamil Nadu News
- Chandrayaan-3 soft landing live : நிலவில் தடம் பதித்த இந்தியா - சந்திரயான்3 வெற்றி!
Chandrayaan-3 soft landing live : நிலவில் தடம் பதித்த இந்தியா - சந்திரயான்3 வெற்றி!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது
சந்திரயான்-3 வெற்றி: பொறாமையில் பொங்கும் பாகிஸ்தான்; வரவேற்கும் மக்கள்!
சந்திரயான்3 வெற்றி: விஞ்ஞானி வீரமுத்துவேலுவுக்கு செல்போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சந்திரயான்3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் உடன் செல்போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை வழங்குவதில் மகிழ்ச்சி: தென் ஆப்பிரிக்க அதிபர்!
ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பாராட்டியுள்ளார்
வீரமுத்துவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சந்திரயான் 3-இன் திட்ட இயக்குநராக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் உடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்
இறங்கும் இடத்தை சிறப்பாகத் தேர்வு செய்த லேண்டர்!
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்தின் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. படத்தில் லேண்டரில் உள்ள கால் ஒன்றின் நிழல் தெரிவதை சுட்டிக்காட்டியுள்ளது. இறங்குவது ஏற்ற சமதளப் பரப்பை சிறப்பாக தேர்வு செய்திருப்பதாவும் கூறியுள்ளது.

இஸ்ரோ குழுவினருக்கு சத்குரு வாழ்த்து
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது பாரதம் கொண்டாடும் பெருமையான நாள் என ஈஷா யோகஆ மையத்தின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
India'IS RO'cking: இஸ்ரோவுக்கு குவியும் பாராட்டுகள் - பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன
நிலவில் இந்தியா: இஸ்ரோவுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு!
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்
இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!
இஸ்ரோ சந்திரயான் திட்டத்தின் மூன்று நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய பெருமையை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்
லேண்டர் எடுத்த புதிய படங்கள்: இஸ்ரோ வெளியீடு
பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கும் சந்திரயான்-3 லேண்டருக்கும் இடையேயான தகவல் தொடர்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து லேண்டர் நல்ல நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தரையிறங்கிய பின் லேண்டர் கேமரா எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவுக்கு வரும் பிரதமர் மோடி
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டுவதற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறார்.
ஈஷா யோக மையத்தில் வெற்றி கொண்டாட்டம்
ஈஷா யோக மையத்தில் வெற்றி கொண்டாட்டம்
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்!!
சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்து பேசினார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்!!
சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்து பேசினார்.
தமிழர் வீரமுத்துவேல் பெருமிதம்!!
நிலவில் விக்ரம் லேண்டர் கால் பதித்த பின்னர் இந்த திட்டத்தில் பணியாற்றிய துணை இயக்குநரும் தமிழருமான வீரமுத்துவேல் பேசினார்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கியதும் உடனடியாக தென் ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசியில் பேசினார்.
நிலவில் மணல் மழை பெய்யும்!!
நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியத்தை அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு மணல் மழை பெய்யும். நான்கு மணி நேரத்துக்குப் பின்னர்தான் அதிசய நிகழ்வாக விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் தரையிறங்கும். இரண்டும் ஒருவருக்கு ஒருவர் தங்களை படம் எடுத்துக் கொள்வார்கள். இரண்டரை மணி நேரத்துக்குப் பின்னர் பிரக்யான் ரோவர் இயக்கப்படும். மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் ரோவரில் இருக்கும் சோலார் பேனல் இயங்கும்.
வீரமுத்துவேலுக்கு சோம்நாத் பாராட்டு!!
பிரதமர் மோடி வெற்றி குறித்து பேசி இஸ்ரோ குழுவினரை பாராட்டினார். இவரைத் தொடர்ந்து சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்பட வெற்றிக்கு பாடுபட்ட அனைவரையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டி பேசினார்.
சந்து மாமாவுக்கு மதர் இந்தியா ராக்கி கயிறு கட்டினார்!!
தென் துருவத்தில் முதல் விண்கலம் சந்திரயான் 3!!
நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் விண்கலம் சந்திரயான் 3 என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.