- Home
- Politics
- கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்
திமுக எம்.எல்.ஏ, செந்தில் பாலாஜியின் கோட்டை எனக் கருதப்படும் கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகும் பல்வேறு தரப்பினரும் தவெகவில் கொத்துக் கொத்தாக இணைந்து வருகின்றனர்.

விஜய்யின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கரூர் மாவட்டத்தில், 400-க்கும் மேற்பட்டோர் தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.
2024-இல் தொடங்கப்பட்ட நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஒரே வருடத்தில் வேகமாக வளர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது அணியாக உருவெடுத்து வருகிறது. பல மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இளைஞர்கள், முதல்தடவை வாக்களிப்போர் ஆகியோரிடம் ஆதரவு பெருகி வருகிறது.
தவெகவின் செல்வாக்கு தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களிடையே ‘மாற்றம்’ எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் விஜய்யுடன் இருந்து முடிவுகளை எடுப்பது தவெகவுக்கு பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது தவெகவின் வாக்கு வங்கி 28 சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவிகிதத்தை பெறுவதற்காக உழைத்தால், நிச்சயம் வெற்றி உறுதி. தவெகவுக்கு தற்போது 18 வயது முதல் 40 வயது வரையிலான மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். அந்த ஆதரவை 90 வயது வரை இருக்கும் மக்களிடம் பெற வேண்டும் என்கிற முடிவில் தவெக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். மாற்றுக்கட்சி தலைவர்களும் தவெகவில் இணைய பேரார்வம் காட்டி வருகின்றனர்.
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்கட்சிகள் எதிர்பார்த்த நிலையில் மாறாக விஜய்க்கு ஆதரவான மனநிலையை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் தவெகவுக்கு அனுதாபத்தையே ஏற்படுத்தி வருகிறது. திமுக எம்.எல்.ஏ, செந்தில் பாலாஜியின் கோட்டை எனக் கருதப்படும் கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகும் பல்வேறு தரப்பினரும் தவெகவில் கொத்துக் கொத்தாக இணைந்து வருகின்றனர். சிறுபான்மையினர் வாக்கு தங்களுக்கே என இறுமாப்பு காட்டி வரும் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட 400 பேர் தவெகவில் அம்மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமையில் இணைந்து செந்தில் பாலாஜி கோட்டையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
