இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன

சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதிபடுத்தியுள்ளார். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர், பூமியின் நேரப்படி 14 நாட்களும், நிலவின் நேரப்படி ஒரே ஒரு நாளும் செயல்படவுள்ளது. இதையடுத்து 26 கிலோ எடை கொண்ட ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, உலகம் முழுவதும் இருந்து இஸ்ரோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நெட்டிசன்கள் இந்தியாவின் வெற்றியை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவனை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

பள்ளிக் குழந்தைகள், கிரிக்கெட் வீரர்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும், இஸ்ரோவின் நேரலை காட்சியை கண்டு களித்ததோடு, விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும், பெருமை மிகுதியில் துள்ளிக் குதித்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய திரையில் சந்திரயான்-3 தரையிறக்கம் ஒளிபரப்பப்பட்டது. இஸ்ரோவின் வெற்றி ஒரு இந்தியராக அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது.

Scroll to load tweet…

மகேந்திர குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “ நட்சத்திரங்களை எவ்வாறு குறிவைக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்த, நம் சொந்த திறன்களை நம்ப வைத்த, தோல்வியைச் சமாளிப்பது மற்றும் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான தளமாக அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டிய இஸ்ரோவுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சந்திரயான்-3 தொடர்பான கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் பெருமையான தருணம். இஸ்ரோவுக்கும், இந்த மகத்தான் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி. இது நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்ந்து கொண்டாட எங்களுக்கு வழிகாட்டட்டும்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, “இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம். சந்திரயான் 3 பயணத்தின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள். இஸ்ரோவிற்கு வாழ்த்துகள்.” என வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

“சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் பாரதத்திற்கு பெருமையான நாள். இந்த தேசத்தின் மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் வாழும் மகத்தான ஆற்றல் மற்றும் முயற்சிக்கான சான்று. இஸ்ரோ குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.” என சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.