- Home
- Politics
- சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் இந்த கருத்தரங்கம் பாரதியாரை மையப்படுத்தி, பெரியாருக்கு எதிரான விவாதங்களை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

"சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் நாம் தமிழர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கருத்தரங்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டிசம்பர் 20, 2025 அன்று திருச்சியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பில் நடைபெறவிருக்கும் பாரடியைப்போற்றுவோம்; பாரதிரப்போற்றுவோம். நன்றி மறவா நற்றமிழ் இனத்தீரே..! போஸ்டர் அரசியல் களத்தில் விவாதன்களை ஏற்படுத்தி உள்ளது.பாரதியார் சாதி பாகுபாடு எதிர்ப்பு, பெண் விடுதலை, தமிழ் மொழி பெருமை போன்றவற்றை தன் கவிதைகளில் வலியுறுத்தியவர்.
பெரியார், ஈ.வெ. ராமசாமியை சாதி வெறியன் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் பெரியாரை தமிழ் மொழி, தமிழர் பெருமைக்கு எதிரானவர் என்று விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் ‘விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.
சீமான் தனது உரையில் பாரதியாரை தமிழின் மகத்தான கவிஞராக போற்றி, தமிழ் மொழி, தமிழ் தேசியம், பெண் விடுதலை, சமூக நீதி ஆகியவற்றில் பாரதியாரின் பங்களிப்பை எடுத்துரைத்தார். ஈ.வெ.ரா., அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர் வருவதற்கு முன்பே ‘தமிழ்நாடு’ என்ற பெயரை பாரதியார் தனது பாடல்களில் பயன்படுத்தினார் என்று கூறினார். பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று போற்றினார். ஆனால் ஈ.வெ.ரா. தமிழை "காட்டுமிராண்டி மொழி" என்று கூறியதாக விமர்சித்தார்.
"பாரதி நிராகரிக்கப்படும் இடத்தில் தமிழும் நிராகரிக்கப்படுகிறது" என்று கூறி, திராவிட இயக்கங்களின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று கூறி, பாரதியார் போன்றவர்களின் சிந்தனைகளை முன்னிறுத்தினார். "பாரதியாரைப் பற்றி பேசுவதற்கு பாகிஸ்தானுக்குக்கூட போவேன்" என்று கூறி, மேடையின் அரசியல் பின்புலத்தை தாண்டி பாரதியாரை போற்றுவதே நோக்கம் என்றார்.
இந்த உரை தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'துக்ளக்' ஆசிரியர் சோ. குருமூர்த்தி "பாரதியார் பற்றிய சீமான் பேச்சு அபாரம்; திமுகவுக்கு பெரும் சவால்" என்று பாராட்டினார். பாரதியாரின் பேரன் வைரபாரதி அவர்களும் அதே மேடையில் சீமானுடன் பேசினார். இந்நிலையில் RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? என விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலளித்தா சீமான், ‘‘பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன். பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். எங்கு பேசினேன் என பார்க்காதே, என்ன பேசினேன் என பாருங்கள். பா.ஜ.க. தலைவர்களை தி.மு.க.வினர் புகழ்ந்தும் பேசியுள்ளனர். அதனை என்ன சொல்வது? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், சீமானின் பாரதி பற்றிய உரையை புகழ்ந்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ‘‘பாரதியாரை பற்றி சீமான். கேட்கவேண்டிய அபாரமான உரை. பாரதியாரை ஏற்ற தமிழ் தேசியம் பாரதி பாடிய சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தின் அங்கம். தமிழைத் திருடிய திமுகவுக்கு பெரும் சவால் சீமான்’’ என வானளாவப் புகழ்ந்து இருந்தார். இந்நிலையில், "சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் நாம் தமிழர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கருத்தரங்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்தி செயல்படுகிறது. சீமான் பாரதியாரை தமிழர் வரலாற்றின் மகத்தான கவிஞராகவும், தமிழ்நாடு என்ற பெயரை முதலில் கருத்தியல் ரீதியாக வைத்தவராகவும் போற்றுகிறார். அதேநேரம், பெரியாரின் திராவிட இயக்கக் கொள்கைகளை குறிப்பாக தமிழ்-சமஸ்கிருத உறவு, மதம், சாதி சீர்திருத்தம் குறித்த சில கருத்துகள் தமிழர் ஒற்றுமைக்கு எதிரானவை என்று விமர்சிக்கிறார்.
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் இந்த கருத்தரங்கம் பாரதியாரை மையப்படுத்தி, பெரியாருக்கு எதிரான விவாதங்களை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
