நிலவில் இந்தியா: இஸ்ரோவுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்

India is on moon mk stalin and other political leaders wishes isro and entire team

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில், 40 நாட்கள் பயணத்துக்கு பின்னர், சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக தரையிறக்கப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி படுத்தியுள்ளார். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய விண்வெளித்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்  என தெரிவித்த பிரதமர் மோடி, இஸ்ரோவுக்கும், சந்திரயான்-3 திட்ட பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும்; புதிய இந்தியா உருவாகியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

இந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலவில் இந்தியா..! சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள். சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்.” என்று பதிவிட்டுள்ளார்.

“எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவத்தில், சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியது, இந்திய விஞ்ஞானிகளின் பல தசாப்த திறன் மற்றும் கடின உழைப்பின் விளைவாகவே சாத்தியமானது! 1962 முதல், இந்திய விண்வெளித் துறை புதுப்புது உச்சங்களை தொட்டு, இளைய தலைமுறைக்கு உந்துதலாக விளங்கி வருகிறது" என ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

சந்திரயான்-3 வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்திரயான் 3 ஒரு அற்புதமான நிலவு தரையிறக்கத்தை மேற்கொண்டதற்கு இஸ்ரோவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், நிலவின் மேற்பரப்பில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்குகிறது. நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு மனப்பான்மை இந்த நம்பமுடியாத பெருமையை நமக்கு கொண்டு வந்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.சந்திரயான்-3 வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்திரயான் 3 ஒரு அற்புதமான நிலவு தரையிறக்கத்தை மேற்கொண்டதற்கு இஸ்ரோவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த குறிப்பிடத்தக்க மைல்கல், நிலவின் மேற்பரப்பில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்குகிறது. நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு மனப்பான்மை இந்த நம்பமுடியாத பெருமையை நமக்கு கொண்டு வந்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3இன் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. மனிதர்களால் அறியப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் இது என்கிறா பெருமையை இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் விண்வெளி பயண லட்சியம், தொழில்நுட்ப வல்லமை, மற்றும் துணிச்சலை உலகிற்கு நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலான இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்திராயன் 3 திட்டத்தின் வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு விண்வெளிக்கான நுழைவாயிலைத் திறப்பது, நமது இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஒரு பில்லியன் கனவுகளின் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது! இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், நமது பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா ஒரு அசைக்க முடியாத விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. நிலவின் தென் துருவத்தை முதன்முதலில் தொட்ட இஸ்ரோ குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாய்ப்புகள் நமக்கு எதிராக இருக்கும் போது, அதை துல்லியமாக வழங்க எங்கள் இந்தியாவை நம்புங்கள்.” என தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதை அடுத்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்து ஹர்தீப் பூரி கூறுகையில், “23 ஆகஸ்ட் 2023 இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையளிக்கும் தருணம்.” என்றார்.

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதைக் குறித்து பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், “இந்தப் பணியில் தொடர்புடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில், விண்வெளித் துறையில் இந்தியா தனக்கென தனித்துவத்தை உருவாக்கி வருகிறது. இது 'ஆத்மநிர்பர் பாரத்' என்ற மந்திரம் உண்மை என்பதை நிரூபித்துள்ளது.இந்த வெற்றிகரமான தரையிறங்கும் பணியின் மூலம், நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது நாட்டிற்கு ஒரு அசாதாரண சாதனையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

“சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்குவது புதிய இந்தியாவின் திறன்களின் சக்திவாய்ந்த காட்சியாகும். பிரதமரின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், யாராலும் செய்ய முடியாததை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தனர். நிலவின் தென் துருவம் இதுவரை உலகிற்கு சாத்தியமற்றதாக இருந்தது, ஆனால் நமது தொலைநோக்கு விஞ்ஞானிகள் அதை சாத்தியமாக்கியுள்ளனர். வசுதைவ குடும்பகம் என்ற தூய உணர்ச்சியுடன், இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளையும் வாழ்த்துகிறேன் மற்றும் இந்த வெற்றிக்காக தேசத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios