ஃபேஸ்புக் மூலம் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பட்டாதாரிப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த  இளைஞர்  ஒருவரை போலீசார் கைது செய்தனர். பட்டாரிப் பெண்ணை தனது நண்பனுக்கும் விருந்தாக்க நினைத்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

சமூக வலைதளங்கள் பலருக்கு நல்ல செய்திருக்கிறது. ஆனால் பெரும்பாலும் பல சமயங்களில் சமூக வலைதளங்கள் பலரை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் ஏராளமேனோர் பணத்தை இழந்துள்ளனர்.

சில நேரங்களில் ஃபேஸ்புக்கில் நல்ல நண்பர்கள் போல் பழகி ஏமாற்றி வருகின்றனர். முக்கியமாக பெண்கள் ஃபேஸ்புக் ஆண் நண்பர்களிடம் பணம், நகை மட்டுமல்லாமல் கற்பையும் இழந்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கால் நண்பர்கள் ஆகி அதனால் கொலை கூட நடந்திருக்கிறது. என்வே முடிந்த அளவு சமுக வலைதளங்களை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் சில இளைஞர்கள் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை திசைமாறி சீரழிந்துவிடுகிறது.

இப்படி ஒரு சம்பவம் நெல்லை அருகே நிகழ்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த  சுமதி என்ற பட்டதாரி பெண்ணுக்கும், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுரேஷ்  என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார்கள்.நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. சுமதியை தனிமையில் சந்திக்கவேண்டும் என்று சுரேஷ் தனது ஆசையை  தெரிவித்தார். அவரும் தன்னை நேசிப்பவர்தானே என்று  மறுக்காமல் நேரில் சந்தித்தார். பின்னர் தொடர்ந்து பலமுறை சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில்  3 மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதி ஒன்றில் சுரேசும், சுமதியும்  உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுரேஷ்  தனது காதலி சுமதியை பல கோணங்களில் படம் எடுத்துள்ளார். மேலும் அவர்கள்  இருவரும் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார்கள். சுரேஷ் எப்படியும் தம்மை திருமணம் செய்து கொள்வார் என நினைத்து சுமதி போட்டோ எடுத்துக்கொண்டார்.

இதனிடையே சுரேஷ் தனது காதல் விவகாரத்தை நண்பன் அரிகரசுதனிடம் கூறி அப்போது எடுத்த போட்டோக்களை காட்டியுள்ளார். இதையடுத்து  அரிகரசுதனும் சுரேசின் காதலியை சந்திக்க விரும்பினான். காதலனின்  நண்பன் தானே என்று அந்த பெண், அரிகரசுதனிடமும் அன்பாக பழகினாள். ஒரு சந்தர்ப்பத்தில் சுரேசும், அரிகரசுதனும் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினர்.மேலும் சுரேஷ், அரிக‌ரசுதன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அந்த பட்டதாரி பெண் பணகுடி போலீசில் புகார் செய்தார்.

,தைத் தொடர்ந்து போலீசார் சுரேசையும், அரிகரசுதனையும் மடக்கி பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து அந்த பெண் மூலமாக அவர்களை காவல்கிணறு சந்திப்புக்கு வர செய்தனர். பணம் பெறுதற்காக சுரேஷ், அரிகரசுதன் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் அங்கு நின்ற பணகுடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.இதற்காக அந்த பெண்ணின் செல்போனில் பதிவான எண்களையும், சுரேஷ் போனில் இருந்த போட்டோக்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுரேஷ் இதுபோல வேறு பெண்களுடன் பழகியுள்ளாரா? சுரேசால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.