Asianet News TamilAsianet News Tamil

நாளை குரூப் 1 முதல்நிலை தேர்வு... தேர்வு மையங்களுக்குள் இதெல்லாம் கொண்டு செல்ல தடை!!

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 1 தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்களுக்குள் மின்சாதன பொருட்கள் மற்றும் மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

electrical appliances are prohibited to carry inside the group 1 exam centers
Author
First Published Nov 18, 2022, 10:40 PM IST

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 1 தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்களுக்குள் மின்சாதன பொருட்கள் மற்றும் மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. 

இதையும் படிங்க: தமிழக கால்நடை பராமரிப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? விவரம் உள்ளே!!

குரூப் 1 தேர்வு துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என மொத்தம் 92 இடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. இதற்காக டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இதை அடுத்து குரூப் 1 தேர்வு கடந்த அக்.30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: பீர் பாட்டிலால் பெண்ணின் முகத்தில் குத்திய இளைஞர்… சென்னை அருகே நிகழ்ந்த பயங்கரம்!!

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனிடையே நாளை குரூப் 1 தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களுக்குள் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும் மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios