பீர் பாட்டிலால் பெண்ணின் முகத்தில் குத்திய இளைஞர்… சென்னை அருகே நிகழ்ந்த பயங்கரம்!!
சென்னை அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் முகத்தில் பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் முகத்தில் பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆம்பூரி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவர் சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். மேலும் அதே பகுதியில் இருக்கும் விடுதியில் அவர் பணிக்கு சென்று வந்தார்.
இதையும் படிங்க: டெல்லியைப் போன்றே வங்கதேசத்திலும் காதலித்த இளம் பெண்ணை பல துண்டுகளாக வெட்டிக் கொன்ற காதலன்!
அந்த பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் சென்னையை சோ்ந்த நவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீன் இந்திய கடற்படையில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். நட்பாக பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்கத் தொடங்கினர். அப்போது நவீன் கடற்படையில் பணியாற்றுவதாக கூறியது பொய் என்பதை அறிந்த அந்த பெண் நவீன் மீதான காதலை முறித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: அடுக்குமாடியின் 4வது மாடியில் இருந்து காதலியை கீழே தள்ளியவர் மீது உத்தரப்பிரதேசம் போலீசார் துப்பாக்கிச் சூடு!
அவரை சமாதானம் செய்ய முயன்ற நவீன், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து பீர் பாட்டிலை உடைத்து பெண்ணின் முகத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த மக்கள் மீட்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் நவீனை கைது செய்தனர்.