அடுக்குமாடியின் 4வது மாடியில் இருந்து காதலியை கீழே தள்ளியவர் மீது உத்தரப்பிரதேசம் போலீசார் துப்பாக்கிச் சூடு!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து வாக்குவாதத்திற்குப் பின்னர் தனது 17 வயது காதலியை கீழே தள்ளிவிட்டு, தலைமறைவான முகமது சுஃபியன் மீது இன்று போலீசார் என்கவுன்டர் நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து வாக்குவாதத்திற்குப் பின்னர் தனது 17 வயது காதலியை கீழே தள்ளிவிட்டு, தலைமறைவான முகமது சுஃபியன் மீது இன்று போலீசார் என்கவுன்டர் நடத்தினர். இதில் அவருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலி நிதி குப்தாவை திருமணம் செய்வதற்காக மதம் மாறுமாறு முகமது சுஃபியன் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், நிதி குப்தா சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நிதி குப்தாவை தனது அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து முகமது தள்ளியுள்ளார். சிறுமியின் மரணத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த முகமதுவை இன்று போலீசார் என்கவுன்டர் செய்தனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்! போலீஸ் குவிப்பு..!
இதில் காலில் துப்பாக்கி குண்டு அடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் முகமது சுஃபியன் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக முகமதுவை கண்டுபிடிக்க 9 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொலைக் குற்றச்சாட்டு தவிர, 'சட்டவிரோத மத மாற்றம்' குற்றத்திற்காகவும் முகமது சுஃபியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நிதியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில், நிதியை கடந்த சில காலமாகவே முகமது துன்புறுத்தி காதலில் விழ வைத்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் பியூஸ் மோர்டியா, ''பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நட்புடனும், ஒரு ஆண்டுக்கும் மேலாக உறவிலும் முகமது இருந்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியைப் போன்றே வங்கதேசத்திலும் காதலித்த இளம் பெண்ணை பல துண்டுகளாக வெட்டிக் கொன்ற காதலன்!
மேலும், 17 வயது சிறுமிக்கு மொபைல் போனையும் பரிசாக கொடுத்துள்ளார்'' என்றார். கடந்த செவ்வாய்க்கிழமை, நிதி குப்தாவின் குடும்பத்தினர் முகமது சுஃபியன் வீட்டிக்குச் சென்றபோது, அவர்களது உறவு குறித்து தெரிய வந்துள்ளது. அப்போது அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமி நான்காவது மாடிக்கு ஓடியுள்ளார். அவரை பின்தொடர்ந்து முகமதுவும் ஓடியுள்ளார். சிறிது நேரத்தில் எதோ ஒன்று மேலே இருந்து கீழே விழுந்த சப்தம் கேட்டுள்ளது. அங்கிருந்து முகமது தப்பி ஓட்டிவிட்டார். விரைந்து சென்ற குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த தங்களது மகளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நிதி இறந்தார். நிதியை முகமது கீழே தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.