பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்! போலீஸ் குவிப்பு..!

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன், மாடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர். புரட்சி பாரதம் கட்சியில் இருந்து வருகிறார். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

madambakkam panchayat president brutally murder... police investigation

காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன்(45) இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் வெங்கடேசன் மீது முதலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், நிலை குலைந்து படுகாயமடைந்தார். 

இதையும் படிங்க;- முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக நிர்வாகியை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

madambakkam panchayat president brutally murder... police investigation

பின்னர், பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் வெங்கடேசனை தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..!

madambakkam panchayat president brutally murder... police investigation

இந்தத சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசன், மாடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர். புரட்சி பாரதம் கட்சியில் இருந்து வருகிறார். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  விதவை பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஏன்டா வீட்டுக்கு வந்த.. தம்பி என்று பாராமல் துடிதுடிக்க கொன்ற அண்ணன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios