கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி ஓவியாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது
கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி ஓவியாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கலைஞர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மு.க அழகிரி மனைவி காந்தி அழகிரி மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
செல்வி – முரசொலி செல்வம் தம்பதியின் மகள் எழிலரசி. இந்த எழிலரசி ஜோதிமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஓவியா, காருண்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஓவியாவுக்கும் சந்தீப் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலினும் அவரின் அண்ணன் அழகிரியும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி! திருப்பூரில் திரளும் 10 லட்சம் பேர்... மிகப்பெரிய பொதுக்கூட்டம் இதுதான்!
இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் ஓவியா கர்ப்பமானார். இவருக்கு வளைகாப்பு நடத்த விரும்பிய குடும்பத்தினர் கலைஞர் வசித்த கோபாலபுரம் இல்லத்தில் அதை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 21-ம் தேதி ஓவியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவிடம் ஆசி வாங்கி தொடங்கிய இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு ஓவியாவை ஆசீர்வதித்து சென்றாராம். அவருடன் சீனியர் அமைச்சர்கள் சிலர் மட்டும் சென்றதாக கூறப்படுகிறது.
Tamil Maanila Congress : பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது தமாகா? என்ன காரணம் தெரியுமா?
மு.க அழகிரி சார்பில் அவரின் மனைவி காந்தி அழகிரி கலந்து கொண்டாராம். இவர்கள் தவிர மு.க தமிழரசு மற்றும் மாறன் குடும்பத்தினரும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
