Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை கண்ணீர் விட வைத்த 'வாழை' திரைப்படம் - அமெரிக்காவில் இருந்து பாராட்டு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வாழை' திரைப்படம், அமெரிக்காவில் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாக கவர்ந்துள்ளது. திரைப்படத்தைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்கலங்கினார்.

Chief Minister Stalin praises vaazhai film director Mari Selvaraj KAK
Author
First Published Sep 2, 2024, 11:20 AM IST | Last Updated Sep 2, 2024, 11:25 AM IST

வாழை திரைப்படத்திற்கு குவியும் வாழ்த்து

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை, நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை படத்தோடு ஒன்றிணைய வைத்த திரைப்படமாக வாழை படம் உள்ளது. வாழை தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் மாரி செல்வராஜ், திரையங்கில் படம் பார்த்தவர்களின் கண்ணீர் குழமாக காட்சி அளித்து வருகிறது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் திரையரங்கில் பார்த்துள்ளார். 

 

காலை உணவு திட்டம் - உருவாக்கியதில் மகிழ்ச்சி

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ்க்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ்க்கு மீண்டும் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Vaazhai:ஒரே டிராக்கில் செல்லும் மாரி செல்வராஜ் - வாழை படத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய ரகசியம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios