12:07 AM (IST) Jun 08

வெறும் ரூ.16,999க்கு Apple iPhone 12 Mini - இப்போ விட்டிங்க.. அப்புறம் கிடைக்காது பார்த்துக்கோங்க.!!

ஆப்பிள்ஐபோன் 12 மினி குறைந்த விலையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அவை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

11:06 PM (IST) Jun 07

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம் - ஏன் தெரியுமா?

பத்தாம் வகுப்புகணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

10:41 PM (IST) Jun 07

ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மையான காரணத்தை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி.. மம்தா பகீர் குற்றச்சாட்டு

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான காரணத்தை மறைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். 

10:41 PM (IST) Jun 07

பொறுத்தது போதும்.. 2024 தேர்தல் பாஜகவுக்கு பாடமாக இருக்க வேண்டும் - திமுகவினருக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைக்க எப்படி கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

10:13 PM (IST) Jun 07

‘தமிழர்களே.. தமிழர்களே.!’ இன்னும் 5 வருடம்..! கலைஞர் நூற்றாண்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்ட மு.க ஸ்டாலின்

முதுமையின் காரணமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்கள்.பிரிந்தார்கள் என்று சொல்வதை விட - நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல - மறைந்திருந்து நம்மை தலைவர் கலைஞர் அவர்கள் கண்காணித்து இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

09:38 PM (IST) Jun 07

கலைஞரின் பிறந்த நாளை இந்த நாளாக மாற்ற வேண்டும்.. முக ஸ்டாலினுக்கு வேண்டுகோளை விடுத்த திருமாவளவன்

கலைஞரின் பிறந்த நாளை மாநில சுய ஆட்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

08:15 PM (IST) Jun 07

கருணாநிதி நூற்றாண்டு விழா: 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

07:53 PM (IST) Jun 07

தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்திய வானிலை மையம் சொன்ன தகவல்..

தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

07:19 PM (IST) Jun 07

BREAKING : ஒடிசாவில் மீண்டும் துயர சம்பவம்.. சரக்கு ரயிலில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

ஒடிசாவின் ஜாஜ்பூரில் சரக்கு ரயிலில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

07:05 PM (IST) Jun 07

பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. மத்திய அமைச்சர் தகவல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

06:43 PM (IST) Jun 07

108 எம்பி கேமரா..கொரில்லா கிளாஸ் - சாம்சங் Galaxy F54 5G எப்படி இருக்கு?

சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) ஆனது 6.7-இன்ச் முழு-HD+ sAMOLED+ டிஸ்ப்ளே 120Hz ரிப்பிரேஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வருகிறது. இந்த மொபைலை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை இங்கு பார்க்கலாம்.

06:26 PM (IST) Jun 07

ஒடிசா ரயில் சோகம்: ரூ. 17 லட்சம் இழப்பீட்டை பெற உயிருடன் இருக்கும் கணவரை இறந்துவிட்டதாக அறிவித்த பெண்..

ஒடிசாவில் ரூ.17 லட்சம் இழப்பீட்டை பெற உயிருடன் இருக்கும் கணவரை இறந்துவிட்டதாக பெண் ஒருவர் அறிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

05:55 PM (IST) Jun 07

டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவான ஆர்.வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

05:08 PM (IST) Jun 07

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

05:03 PM (IST) Jun 07

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

04:55 PM (IST) Jun 07

புதிய நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சுவரோவியம்.. சுதாரித்துக் கொண்ட வங்கதேசம் - என்ன சொல்கிறது இந்தியா?

நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்குப் பிறகு, பங்களாதேஷ் இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஒரு சுவரோவியம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளது.

04:28 PM (IST) Jun 07

மருத்துவ உலகம் அதிர்ச்சி

16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்த குஜராத்தை சேர்ந்த இருதயநோய் மருத்துவர் கவுரவ் காந்தி, மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

04:25 PM (IST) Jun 07

இலவசத்தை சமாளிக்க அரசு எடுக்கும் ஆயுதமா?

மின்கட்டண உயர்வைத்தொடர்ந்து கர்நாடகாவில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

04:25 PM (IST) Jun 07

2024 தேர்தல்... கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள்?

பாஜக கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

04:24 PM (IST) Jun 07

ரயில் விபத்தை எப்படி கையாண்டது அஸ்வினி வைஷ்ணவ் குழு

ஒடிசா மாநில ரயில் விபத்தையடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான குழு அச்சம்பவத்தை எப்படி கையாண்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது