Tamil News Live Updates: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், இபிஎஸ்

Breaking Tamil News Live Updates on 30 october 2023

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். 

10:16 PM IST

மக்களே அலெர்ட்.. நவம்பர் 1 முதல் இந்த விதிகள் எல்லாம் மாறப்போகுது.. முழு விபரம் இதோ !!

இந்த விதிகள் நவம்பர் 1 முதல் மாறும், பண்டிகை காலங்களில் மக்களின் பாக்கெட்டுகள் பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

9:37 PM IST

வாட்ஸ்அப்பில் இனி இதையெல்லாம் செய்ய முடியும்.. மெட்டா வெளியிட்ட அப்டேட்..!!

வாட்ஸ்அப் சேனல்களில் உரை மட்டும் செய்திகளைத் திருத்தும் வசதியை வெளியிட்டுள்ளது.

7:32 PM IST

தீபாவளிக்கு போன் வாங்க போறீங்களா.. கொஞ்சம் காத்திருங்க - நவம்பரில் வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்..

தீபாவளி பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். இத்தகைய நவம்பர் மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளது. இதனைப் பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம்.

7:02 PM IST

டெல்லி மதுபான ஊழல்: மனீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் ஏமாற்றம்.. ஜாமீன் மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்..

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான முறைகேடு தொடர்பான வழக்குகளில் மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

6:19 PM IST

ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 85 கிமீ வரை பயணிக்கலாம்.. குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது..

பவுன்ஸின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 8 வினாடிகளில் வேகத்தை அதிகரிக்கும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:38 PM IST

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:23 PM IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி!!

5:21 PM IST

கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு.. ரூல்ஸ் மாறிப்போச்சு.. மீறினால் அபராதம்..

கிரெடிட் கார்டு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம். அது பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

5:07 PM IST

ஹமாஸ் பயங்கரவாதிகளால் சித்ரவதை செய்யப்பட்ட ஜெர்மன் டாட்டூ கலைஞர்.. இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் !!

ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலில் இருந்த ஷானி லூக் என்ற ஜெர்மன் பெண்ணின் சடலம் இஸ்ரேலால் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் நிர்வாணமாக அணிவகுத்து சென்றனர்.

5:03 PM IST

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: இதுதான் காரணம் - மத்திய அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு தீவிர உடற்பயிற்சி ஓட்ட பயிற்சியை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

4:21 PM IST

தேர்தல் பரப்புரையில் தெலுங்கானா BRS எம்பிக்கு கத்திக்குத்து.. அடையாளம் தெரியாத நபரை தாக்கிய கிராம மக்கள்..

தேர்தல் பரப்புரையில் தெலுங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் எம்பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக்குத்து. அடையாளம் தெரியாத நபரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

3:55 PM IST

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!

அமர்பிரசாத் ரெட்டி உள்பட 4 பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:46 PM IST

மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப்பில் முன்பதிவு செய்யலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் இதோ !!

சென்னை, மெட்ரோ பயணிகள் வாட்ஸ்அப்பில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்று முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

3:18 PM IST

அய்யய்யோ.. இனி எப்படி சாப்பிடப்போறோம்.? பன்னீர் மீது அமர்ந்திருக்கும் முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..

மூடப்படாத பன்னீர் அடுக்குகளின் மேல் ஒருவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

2:37 PM IST

அரியவகை நோய் பாதிப்பால் அவதி... சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை நோய் பாதிப்பு காரணமாக தான் திரையரங்குகளுக்காக சினிமா எடுப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2:28 PM IST

ஆந்திரா ரயில் விபத்து: சம்பவ இடத்துக்கு நேரில் செல்லும் ஜெகன் மோகன்!

ஆந்திர மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் செல்லவுள்ளார்

2:28 PM IST

ஆந்திரா ரயில் விபத்து: என்ன காரணம்?

ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வந்துள்ளது.
 
1:53 PM IST

புத்தம் புது கதைக்களத்துடன் பிரைம் டைமில் களமிறங்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’... அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் முடிந்த கையோடு அதன் இரண்டாம் பாகம் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

1:04 PM IST

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

12:58 PM IST

எனக்கு நீ... உனக்கு நான்! தினேஷின் பிக்பாஸ் எண்ட்ரிக்கு பின்... ரச்சிதா போட்ட எமோஷனல் பதிவு வைரலாகிறது

வைல்டு கார்டு எண்ட்ரியாக தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில் அவர் மனைவி ரச்சிதா ஒரு எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

12:02 PM IST

மதுரையில் இரண்டு புதிய மேம்பாலம்: கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

மதுரையில் இரண்டு புதிய மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

11:57 AM IST

ரஜினியோட எனக்கு ரகசிய திருமணம்னு தெரிஞ்சதும் கோலிவுட்டே ஷாக் ஆகிட்டாங்க - பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை

நடிகர் ரஜினிகாந்தை தான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது குறித்து நடிகை கவிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

11:05 AM IST

லியோ சக்சஸ் மீட் நடத்த அனுமதி அளித்தது காவல்துறை... ஆனா ஒரு கண்டிஷன்

லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

10:58 AM IST

2ஜி மேல்முறையீட்டு வழக்கு: நாளை தீர்ப்பு தேதி?

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

10:57 AM IST

தமிழக அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!

தமிழக அமைச்சர்கள் 3 பேரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

10:03 AM IST

வைல்டு கார்டு போட்டியாளர்களை வந்த வேகத்தில் வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்- அதகளமான புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள 5 பேரையும் முதல்நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

9:38 AM IST

2-வது திருமணத்துக்கு ரெடியான அமலா பால்.... காதலுடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணிய புகைப்படங்கள் இதோ

நடிகை அமலா பால் தனது காதலன் ஜகத் தேசாய் உடன் நடத்திய ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

8:55 AM IST

லியோ படத்தில் ரசிகர்கள் கவனிக்க தவறிய டுவிஸ்டுகள் இத்தனை இருக்கா... Decode பண்ணிய லோகேஷ் கனகராஜ்

லியோ பட ரிலீஸுக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், அப்படத்தில் கவனிக்கப்படாத டுவிஸ்ட் பற்றி பேசி இருக்கிறார்.

8:00 AM IST

கொட்டித்தீர்க்கும் மழை... தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் அப்டேட்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்த நிலையில், இன்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

8:00 AM IST

கேரளாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.! வெடிகுண்டு தயாரித்து இயக்கியது எப்படி.? டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம்

யூடியூப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டு கொச்சியில் மூலப் பொருட்களை வாங்கி ஐஇடி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார். காலை 7.30 மணிக்கு குண்டு வைத்து விட்டு 9.30 மணிக்கு ரிமோட் மூலம் இயக்கியதாகவும் கூறியுள்ளார். 

7:59 AM IST

எதிர்ப்புக்கு மத்தியில் தேவர் குரு பூஜை விழாவிற்கு செல்லும் எடப்பாடி.! உச்ச கட்ட பாதுகாப்பில் பசும்பொன்

பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்க , இன்று பசும்பொன் செல்வதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

10:16 PM IST:

இந்த விதிகள் நவம்பர் 1 முதல் மாறும், பண்டிகை காலங்களில் மக்களின் பாக்கெட்டுகள் பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

9:37 PM IST:

வாட்ஸ்அப் சேனல்களில் உரை மட்டும் செய்திகளைத் திருத்தும் வசதியை வெளியிட்டுள்ளது.

7:32 PM IST:

தீபாவளி பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். இத்தகைய நவம்பர் மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளது. இதனைப் பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம்.

7:02 PM IST:

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான முறைகேடு தொடர்பான வழக்குகளில் மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

6:19 PM IST:

பவுன்ஸின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 8 வினாடிகளில் வேகத்தை அதிகரிக்கும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:38 PM IST:

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:23 PM IST:

5:21 PM IST:

கிரெடிட் கார்டு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம். அது பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

5:07 PM IST:

ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலில் இருந்த ஷானி லூக் என்ற ஜெர்மன் பெண்ணின் சடலம் இஸ்ரேலால் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் நிர்வாணமாக அணிவகுத்து சென்றனர்.

5:03 PM IST:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு தீவிர உடற்பயிற்சி ஓட்ட பயிற்சியை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

4:21 PM IST:

தேர்தல் பரப்புரையில் தெலுங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் எம்பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக்குத்து. அடையாளம் தெரியாத நபரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

3:55 PM IST:

அமர்பிரசாத் ரெட்டி உள்பட 4 பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:46 PM IST:

சென்னை, மெட்ரோ பயணிகள் வாட்ஸ்அப்பில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்று முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

3:18 PM IST:

மூடப்படாத பன்னீர் அடுக்குகளின் மேல் ஒருவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

2:37 PM IST:

பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை நோய் பாதிப்பு காரணமாக தான் திரையரங்குகளுக்காக சினிமா எடுப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2:28 PM IST:

ஆந்திர மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் செல்லவுள்ளார்

2:28 PM IST:

ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வந்துள்ளது.
 
1:53 PM IST:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் முடிந்த கையோடு அதன் இரண்டாம் பாகம் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

1:04 PM IST:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

12:58 PM IST:

வைல்டு கார்டு எண்ட்ரியாக தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில் அவர் மனைவி ரச்சிதா ஒரு எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

12:02 PM IST:

மதுரையில் இரண்டு புதிய மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

11:57 AM IST:

நடிகர் ரஜினிகாந்தை தான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது குறித்து நடிகை கவிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

11:05 AM IST:

லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

10:58 AM IST:

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

10:57 AM IST:

தமிழக அமைச்சர்கள் 3 பேரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

10:03 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள 5 பேரையும் முதல்நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

9:38 AM IST:

நடிகை அமலா பால் தனது காதலன் ஜகத் தேசாய் உடன் நடத்திய ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

8:55 AM IST:

லியோ பட ரிலீஸுக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், அப்படத்தில் கவனிக்கப்படாத டுவிஸ்ட் பற்றி பேசி இருக்கிறார்.

8:00 AM IST:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்த நிலையில், இன்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

8:00 AM IST:

யூடியூப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டு கொச்சியில் மூலப் பொருட்களை வாங்கி ஐஇடி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார். காலை 7.30 மணிக்கு குண்டு வைத்து விட்டு 9.30 மணிக்கு ரிமோட் மூலம் இயக்கியதாகவும் கூறியுள்ளார். 

7:59 AM IST: