Asianet News TamilAsianet News Tamil

புத்தம் புது கதைக்களத்துடன் பிரைம் டைமில் களமிறங்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’... அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் முடிந்த கையோடு அதன் இரண்டாம் பாகம் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Pandian Stores season 2 telecast on vijay tv from october 30 gan
Author
First Published Oct 30, 2023, 1:50 PM IST | Last Updated Oct 30, 2023, 1:50 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் முதன்மையானது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்தது. இதில் ஸ்டாலின், சுஜிதா தனுஷ், குமரன் தங்கராஜன், சித்ரா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம், காயத்ரி, சாந்தி வில்லியம்ஸ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். 

கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இதன் கடைசி எபிசோடு கடந்த சனிக்கிழமை அன்று ஒளிபரப்பானது. இந்த சீரியல் முடிந்த கையோடு, அதன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தயாராகிவிட்டது விஜய் டிவி. பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முதல் சீசன் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், இரண்டாம் பாகத்தில் தந்தை - மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதில் தந்தை கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக 90ஸ் நாயகி நிரோஷா நடிக்கிறார். இந்த ஜோடிக்கு 3 மகன்கள் 2 மகள்கள் என 5 பிள்ளைகள் உள்ளனர். இந்த கூட்டுக்குடும்பத்தை பற்றிய கதையை தான் இந்த இரண்டாவது சீசனில் காட்ட உள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த சீசனில் நடித்த ஹேமா, இந்த இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகம் அக்டோபர் 30-ந் தேதியான இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8 மணிக்கு பிரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதால் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... எனக்கு நீ... உனக்கு நான்! தினேஷின் பிக்பாஸ் எண்ட்ரிக்கு பின்... ரச்சிதா போட்ட எமோஷனல் பதிவு வைரலாகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios