04:05 PM (IST) Jul 23

சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் இருவர் பலி

ஆந்திர மாநிலத்தில் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் வைக்க சென்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

03:56 PM (IST) Jul 23

முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற கூலித்தொழிலாளியின் மகள்

கோவையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையைனை தட்டிச்சென்றுள்ளார்.

03:49 PM (IST) Jul 23

தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிப்பெருந்திருவிழா கோலாகலம் !!

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

01:58 PM (IST) Jul 23

மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் விளாசல்!

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

01:49 PM (IST) Jul 23

Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!

புதிய பைக் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குறைந்த விலையில் ஹீரோ பைக்கை வீட்டிற்கு கொண்டு வரலாம். எப்படியென்று இங்கு பார்க்கலாம்.

01:21 PM (IST) Jul 23

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவது எப்படி? விண்ணப்பம் முதல் கட்டணம் வரை - முழு விபரம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

01:10 PM (IST) Jul 23

பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை - கனிமொழி எம்.பி., காட்டம்!

மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை என்பதுதான் ஜனநாயகத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்

01:09 PM (IST) Jul 23

ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்

01:09 PM (IST) Jul 23

பஞ்சாபில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசும் பாகிஸ்தான்!

சீன ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாபில் போதைப் பொருட்கள், ஆயுதங்களை பாகிஸ்தான் வீசுவது தெரியவந்துள்ளது

01:09 PM (IST) Jul 23

பிரதமர் வீடு திட்டத்துக்கு போட்டி: சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு புதிய திட்டம்!

பிரதமர் வீடு திட்டத்துக்கு போட்டியாக கிராமப்புற மக்களுக்காக ஒரு புதிய வீட்டு திட்டத்தை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது

01:08 PM (IST) Jul 23

குஜராத் கனமழை: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

12:48 PM (IST) Jul 23

From The India Gate : ஆளும் கட்சிக்கு தூது விட்ட கேப்டன் கட்சி.. பதற்றத்தில் தவிக்கும் கர்நாடகா காங்கிரஸ்

ஏசியாநெட்நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 34வது எபிசோட்.

12:15 PM (IST) Jul 23

முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை அதிரடி மாற்றம் - முழு விபரம் உள்ளே !!

விரைவு ரயில் சேவையில் இன்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.

11:30 AM (IST) Jul 23

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

ரிலையன்ஸ்ஜியோவின் சூப்பரான சலுகை மூலம் முழு குடும்பமும் இலவச அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா மற்றும் பலவற்றைப் பெறும் திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

11:02 AM (IST) Jul 23

Tata Motors : எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதி கொண்ட மலிவு விலை கார்.. 7.35 லட்சம் தான் - இவ்வளவு வசதிகளா !!

7.35 லட்சம் விலையில் மின்சார சன்ரூஃப் கொண்ட இந்தியாவின் மிகவும் மலிவு விலை காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

10:34 AM (IST) Jul 23

அடுத்த அதிர்ச்சி.. மணிப்பூரில் துயர சம்பவம்.. உயிருடன் எரிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இருந்து வெளிவரும் மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி ஆயுதமேந்திய கும்பலால் அவரது வீட்டிற்குள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

10:02 AM (IST) Jul 23

மணிப்பூர் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

மணிப்பூரைச் சேர்ந்த வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்

09:35 AM (IST) Jul 23

போதும்டா சாமி! இனி எனக்கும் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை! விலகிய முக்கிய பிரமுகர்! என்ன காரணம் தெரியுமா?

மணிப்பூர் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி. கண்ணன் பாஜகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

09:28 AM (IST) Jul 23

தமிழகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பலத்த காற்று.. 8 மாவட்டங்களில் கனமழை - முழு விபரம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னைவானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

08:54 AM (IST) Jul 23

Netflix : உங்க நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்ட் நிறைய பேருக்கு தெரியுமா.? இதை நீங்க தெரிஞ்சே ஆகணும் !!

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் பாஸ்வேர்ட்களைப் பகிர்வதில் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.