12:12 AM (IST) Jun 13

காவல்நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை.. 100 ஓட்டு கூட கிடைக்காது - நடிகர் எஸ்.வி சேகர் சுளீர்

தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது என்று கூறியிருந்தார் அண்ணாமலை.

11:40 PM (IST) Jun 12

Chennai Fire Accident : சென்னை கே.கே நகரில் பயங்கர தீ விபத்து.. ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்

சென்னைகே.கே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. பேருந்துகள் லாரி, கார்கள், ஆட்டோக்கள் என எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

11:09 PM (IST) Jun 12

பாஜக என்ன செடியா.? மகனுக்கு சீட் கிடைக்காம போயிடும்னு பயமா ஜெயக்குமார்? கரு.நாகராஜன் சவால்

பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

10:29 PM (IST) Jun 12

14 வயதில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் சிறுவன்.. யார் இந்த கைரான் குவாசி?

எலான் மஸ்க்கின்ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அங்கு பொறியாளராக பணிபுரிய 14 வயது சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த சிறுவன் யார்? அவனை பற்றிய முழு தகவல்களை பார்க்கலாம்.

10:14 PM (IST) Jun 12

எல்லாமே இந்தி.. தமிழ் மொழிக்கு தொடர்ந்து அவமானம்.! தமிழ் மக்கள் சும்மா விடமாட்டார்கள் - ராமதாஸ் ஆவேசம்

எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கும், பிற மாநில மொழிகளுக்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும். இதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

08:42 PM (IST) Jun 12

ஏர் கூலர் + அரை நாள் போராட்டம்.. ஜெயலலிதா சர்ச்சை முடிவதற்குள் கருணாநிதியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை

ரூ.40,000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது என்றால் அரசு அவமானப்பட வேண்டும். 2004 முதல் 2009 வரை டி.ஆர் பாலு மத்திய அமைச்சரவையில் இல்லை. எல்லாத்துக்கும் ஊழல் தான் காரணம் என்று பேசியுள்ளார் அண்ணாமலை.

07:49 PM (IST) Jun 12

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக - பாஜக ஷாக் !!

அதிமுக ஆட்சியை தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது என்று அண்ணாமலையை சீண்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

07:33 PM (IST) Jun 12

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனின்சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதை பற்றி இங்கு காண்போம்.

06:49 PM (IST) Jun 12

“ உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது, ஆனால் இந்தியை திணிப்பது” மத்திய அரசை கண்டித்து உதயநிதி ட்வீட்..

இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

06:03 PM (IST) Jun 12

2024 தேர்தலில் எம்பி சீட்.. இந்த தொகுதியா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! நடிகை குஷ்பு சொன்ன சீக்ரெட்

மத்திய அமைச்சர் அமித் ஷா வரும்போது மின்தடை போன்ற பிரச்சினை நடந்திருக்கிறது. அவர் பயண திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கெனவே தெரியும் என்று தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார் குஷ்பு.

05:36 PM (IST) Jun 12

அடிச்சது ஜாக்பாட்.! ஊழியர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 உயர்வு - யாருக்கு தெரியுமா?

குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது.

05:05 PM (IST) Jun 12

அடுத்த பிரதமர் தமிழர் தான்.. எல்லா தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கு.!! தம்பிதுரை கொடுத்த ஷாக் !

தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம். அதற்கு காரணம் திமுக தான். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று அமித்ஷா கூறினார்.

05:00 PM (IST) Jun 12

மருத்துவ படிப்புக்கான பொது கலந்தாய்வை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

மருத்துவ பொது கலந்தாய்வை மத்திய அரசு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

03:31 PM (IST) Jun 12

ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான ‘ராட்சசன்’ கூட்டணி... மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

முண்டாசுப்பட்டி, ராட்சசன் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ராம்குமார் - நடிகர் விஷ்ணுவிஷால் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

01:27 PM (IST) Jun 12

இதென்ன பகல் கொள்ளையா இருக்கு... அனுமனுக்கு பக்கத்து சீட் ரேட் அதிகமா? ஆதிபுருஷ் படக்குழு விளக்கம்

அனுமனுக்காக திரையரங்கில் ஒதுக்கியுள்ள சீட்டுக்கு அருகில் அமர்பவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக பரவிய தகவல் குறித்து ஆதிபுருஷ் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

12:48 PM (IST) Jun 12

காஸ்ட்லி பைக்-ல வந்து செருப்ப திருடிட்டு போறாங்க... என்ன கொடுமை சார் இது - புலம்பிய மாஸ்டர் பட நடிகை

விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா, செருப்பு திருடர்கள் குறித்து பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.

12:31 PM (IST) Jun 12

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார். கடந்த 5-ம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது. 

11:51 AM (IST) Jun 12

தந்தைக்கு டஃப் கொடுக்க ரெடியான கதீஜா... இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமான் மகள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமான், ஹலிதா ஷமீம் இயக்கி வரும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

11:43 AM (IST) Jun 12

UPSC முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. 14,624 பேர் தேர்ச்சி பெற்று மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

11:38 AM (IST) Jun 12

Andhra Accident : லாரி மீது கார் மோதல்! 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி

ஆந்திராவில் கார் மீது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கார் விபத்து