காஸ்ட்லி பைக்-ல வந்து செருப்ப திருடிட்டு போறாங்க... என்ன கொடுமை சார் இது - புலம்பிய மாஸ்டர் பட நடிகை
விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா, செருப்பு திருடர்கள் குறித்து பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
ஆனந்த ராகம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் சங்கீதா. இவர் விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம், அஜித்தின் வலிமை, சந்தானத்துடன் பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமா மற்றும் சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வரும் சங்கீதா, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்களும் உள்ளனர்.
நடிகை சங்கீதா சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் செருப்பு திருடர்கள் பற்றி பேசி இருந்தார் சங்கீதா. வீடு தேடி வந்து யாராவது செருப்பு திருடுவார்களா என கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த சம்பவம். நடிகை சங்கீதா சென்னை கேகே நகரில் உள்ள பிடி ராஜன் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார்.
இதையும் படியுங்கள்... தந்தைக்கு டஃப் கொடுக்க ரெடியான கதீஜா... இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமான் மகள்
இவர் வீட்டில் அடிக்கடி செருப்பு தொலைந்துபோனதால் ஷாக் ஆன சங்கீதா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் காஸ்ட்லி பைக்கில் வரும் இருவரும், சங்கீதா வீட்டின் வாசலில் இருக்கும் செருப்பை அவர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது. தம்மாதூண்டு செருப்பை திருட காஸ்ட்லி பைக்கில் வரும் இந்த வினோத கொள்ளையர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.
பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள சங்கீதா, அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். வயதான் தாய் மற்றும் குழந்தையுடன் தான் தனியாக வசித்து வருவதால், இந்த கொள்ளை சம்பவம் குறித்து கேகே நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... எதோ வேலை நடக்கனும்னு தான போனாங்க; அப்போ போயிட்டு, இப்போ வைரமுத்து மீது புகார் கூறுவது ஏன்? பிரபல நடிகை காட்டம்