“ உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது, ஆனால் இந்தியை திணிப்பது” மத்திய அரசை கண்டித்து உதயநிதி ட்வீட்..

இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Udhayanidhis tweet condemning the central government for "cheating as Tamil-Tamils by lip service, but imposing hindi".

விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளரும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவில் “இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் - இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும் - இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்" என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் - தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது. தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியூ இந்தியா இன்சூரன்ஸ் உடனே திரும்பப்பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios