Andhra Accident : லாரி மீது கார் மோதல்! 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

Andhra Pradesh Road Accident...6 members of the same family were killed!

ஆந்திராவில்  கார் மீது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் நொறுங்கியது. இந்த விபத்தில்  2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

இதையும் படிங்க;- சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்! பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட சிறுவன் பரிதாப பலி!

Andhra Pradesh Road Accident...6 members of the same family were killed!

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியின் அடியில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்டனர். அதில், உடல் நசுங்கி உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;- மனைவி பெயரில் வாங்கிய சொத்து பினாமி சொத்து அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Andhra Pradesh Road Accident...6 members of the same family were killed!

முதற்கட்ட விசாரணையில் அனைவரும் ராஜமுந்திரியில் ஒரு சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புறப்பட்ட போது விபத்து நடந்ததாகவும், அதிவேகமே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  சாமி கும்பிட வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்! டார்ச்சர் செய்ததால் கொலை செய்துவிட்டு பூசாரி என்ன செய்தார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios