மனைவி பெயரில் வாங்கிய சொத்து பினாமி சொத்து அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

குடும்ப சொத்து தகராறில், மறைந்த தந்தை தனது தாய்க்கு பினாமி சொத்து கொடுத்ததாக மகன் ஒருவர் தொடர்ந்த வழக்கில் கல்கத்தா உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Buying assets in wife's name isn't always benami deal: Calcutta high court

மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்தை பினாமி பரிவர்த்தனை என்று கூற முடியாது என கல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் பார்த்த சார்த்தி சாட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கடந்த வாரம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்தது.

"இந்திய சமுதாயத்தில், ஒரு கணவன் தன் மனைவியின் பெயரில் சொத்து வாங்குவதற்கு பணம் வழங்கினால், அதை பினாமி பரிவர்த்தனை எனக் கருதவேண்டியதில்லை. பணத்தின் ஆதாரம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு முக்கியமான காரணியாகும். ஆனால் தீர்க்கமான ஒன்று அல்ல" என்று நிதிபதிகள் கூறினர்.

கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படியுங்கள்! தெலுங்கானா ஆளுநர் தமிழசை அறிவுரை

Buying assets in wife's name isn't always benami deal: Calcutta high court

குடும்ப சொத்து தகராறில், மறைந்த தந்தை தனது தாய்க்கு பினாமி சொத்து கொடுத்ததாக மகன் ஒருவர் தொடர்ந்த வழக்கை கல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரித்தது. மகன் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பினாமி பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் பொறுப்பு வழக்கு தொடர்ந்தவருக்கே உள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இரண்டு வகையான பினாமி பரிவர்த்தனைகள் பொதுவாக அங்கீகரிக்கப்படுகின்றன என்று நீதிமன்றம் கூறியது. மற்றொரு நபரின் பெயரில் அந்த நபருக்கு பயனளிக்கும் நோக்கம் இல்லாமல், தனது சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்குவது முதல் வகை. இரண்டாவது வகையில், சொத்தின் உரிமையாளர் சொத்துக்கான உரிமையை மாற்றும் நோக்கமின்றி மற்றொருவருக்கு ஆதரவாக ஒரு பத்திரத்தை உருவாக்குகிறார்.

அமெரிக்கா செல்லும் பிரதமர்! நியூ ஜெர்சி உணவகத்தில் 'மோடி ஜி' பெயரில் இந்திய உணவு ரெடி!

Buying assets in wife's name isn't always benami deal: Calcutta high court

இந்நிலையில், வருமான ஆதாரம் இல்லாத வீட்டுப் பெண் - மனைவி பெயரில் கடந்த 1969ஆம் ஆண்டு தந்தை வீட்டு மனை வாங்கி பதிவு செய்துள்ளார். அதில் இரண்டு மாடி வீடு கட்டினார். 1999இல் அவர் இறந்த பிறகு, வாரிசு சட்டங்களின்படி, அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றனர். மகன் 2011ஆம் ஆண்டு வரை அந்த வீட்டில் இருந்தார். ஆனால் அவர் வெளியே சென்றதும், சொத்து தனக்கும், தனது தாய் மற்றும் சகோதரிக்கும் இடையே பிரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். தாயும் சகோதரியும் அதை நிராகரித்தனர்.

இந்த விவகாரத்தில் மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விஷயங்களை சிக்கலாக்கும் வகையில், தனது மகனின் நடத்தையால் கோபமடைந்த தாய், 2019இல் இறப்பதற்கு முன்பு தனது சொத்தின் பங்கை தனது மகளுக்கே வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஒரு தமிழ் கலெக்டர்! கோட்டயம் மாவட்டத்தை அசத்தும் மதுரை பெண் விக்னேஷ்வரி ஐஏஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios