10:10 PM (IST) Nov 07

உங்கள் கிரெடிட் கார்டு வட்டியை எளிதாக குறைக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் இதோ..

இப்போது நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு வட்டியைக் குறைக்கலாம். கிரெடிட் கார்டு பற்றி முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

07:50 PM (IST) Nov 07

தீபாவளியையொட்டி சென்னை - நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்.. முழு விபரம் உள்ளே..!

சென்னை - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு வந்தே பாரத் விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. இதுகுறித்த முழு விபரங்கள் வெளியாகி உள்ளது.

07:20 PM (IST) Nov 07

ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.. தபால் அலுவலகத்தில் இந்த கணக்கை தொடங்குங்க..

தபால் அலுவலகத் திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்க விரும்பினால், இந்தக் கணக்கைத் திறக்கவும். இந்த திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்.

06:44 PM (IST) Nov 07

Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 10 % போனஸ்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

06:27 PM (IST) Nov 07

போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டால் எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்: ராஜீவ் சந்திரசேகர் அறிவுறுத்தல்!

போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டால் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்

05:32 PM (IST) Nov 07

இந்த கார்கள் எல்லாம் இனி ஓட்ட தடை.. மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம்.. முழு விபரம் இதோ !!

இந்த கார்களை அரசாங்கம் தற்போது தடை செய்துள்ளது. நீங்கள் ஓட்டினால் உங்களுக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

05:15 PM (IST) Nov 07

இன்ஸ்டாகிராம் மூலம் கிரியேட்டர்கள் இனி ஈஸியா சம்பாதிக்கலாம்.. மெட்டா கொடுத்த குட் நியூஸ்..

இன்ஸ்டாகிராம் படைப்பாளிகள் பணம் சம்பாதிப்பதற்கான கூடுதல் வழிகளைப் பெறுகிறார்கள். மெட்டா புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.

04:25 PM (IST) Nov 07

மணிப்பூருக்கு பிளைட் டிக்கெட்.. வேங்கைவயலுக்கு பஸ் டிக்கெட் எடுத்தாச்சு - திமுக Vs பாஜக சோசியல் மீடியா சண்டை

தமிழக பாஜக மற்றும் திமுகவினர் இடையே தொடரும் சண்டை உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது. எக்ஸ் தளத்தில் இரு கட்சியினரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டு வருகிறார்கள்.

04:09 PM (IST) Nov 07

புழல் சிறையில் 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை: ஜாமீன் மனுவில் அமர்பிரசாத் ரெட்டி தகவல்!

சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக அமர்பிரசாத் ரெட்டி தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்

03:46 PM (IST) Nov 07

போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை - மத்திய அரசு!

போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

03:36 PM (IST) Nov 07

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 200 கிமீ வரை ஜாலியாக பயணிக்கலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்லும் மின்சார ஸ்கூட்டர் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

03:08 PM (IST) Nov 07

பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம்: மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தேசிய மலரான தாமரையை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

02:24 PM (IST) Nov 07

பழைய அரசு வாகனங்களின் பதிவு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பேருந்துகள் உட்பட 15 ஆண்டுகளுக்கும் மேலான அரசு வாகனங்களின் பதிவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

01:46 PM (IST) Nov 07

வன்னியர் சங்க கட்டிட வழக்கு: தமிழக அரசின் உத்தரவு ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி!

வன்னியர் சங்க கட்டிடத்தை மீட்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01:42 PM (IST) Nov 07

இனி பேச்செல்லாம் கிடையாது வீச்சு தான்! டாஸ்க்கில் ஜெயித்து பிக்பாஸ் வீட்டாரை கதறவிட்ட சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டியில் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றிபெற்று மாயாவுக்கு நோஸ் கட் கொடுத்துள்ளனர்.

01:16 PM (IST) Nov 07

அதிமுகவில் இணைகிறேனா? காயத்ரி ரகுராம் விளக்கம்!

பாஜகவில் இருந்து விலகிய நடிகைகள் காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

12:52 PM (IST) Nov 07

கமலின் பர்த்டே பார்ட்டி... கோலிவுட் முதல் பாலிவுட் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இதையொட்டி சினிமா பிரபலங்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

12:28 PM (IST) Nov 07

திருச்சி தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திருச்சியில், தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

12:13 PM (IST) Nov 07

காலி பொக்கேவை கொடுத்த காங்., பிரமுகர்: வாய்விட்டு சிரித்த பிரியங்கா காந்தி!

காலி பூங்கொத்தை பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் பிரமுகர் கொடுத்த சிரிப்பலையை ஏற்படுத்தும் சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது

12:03 PM (IST) Nov 07

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார்

இயந்திரக்கோளாறால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார். ஐஸ்வால் வடக்கு - 2 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.