மணிப்பூருக்கு பிளைட் டிக்கெட்.. வேங்கைவயலுக்கு பஸ் டிக்கெட் எடுத்தாச்சு - திமுக Vs பாஜக சோசியல் மீடியா சண்டை
தமிழக பாஜக மற்றும் திமுகவினர் இடையே தொடரும் சண்டை உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது. எக்ஸ் தளத்தில் இரு கட்சியினரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க-வா, பா.ஜ.க-வா என்று விவாதங்கள் நடத்தும் அளவுக்குக் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசியல் செய்துகொண்டிருக்கிறது தமிழக பாஜக. தொடர்ச்சியாக செல்லும் இடங்களிலெல்லாம் சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டிருந்தார்.
அதற்கு தி.மு.க கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது. தமிழக அரசால், பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும், வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை பனையூரில் பத்தாயிரமாவது பாஜக கொடிக் கம்பம் நடப்படும் என அறிவித்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கொடி கம்பம் அமைக்க தீவிரம் காட்டி வருகிறார். அடுத்தடுத்து திமுக மற்றும் பாஜக இடையே கடும் சண்டை போய்க்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திமுக ஐடி விங் பாஜகவுக்கு எதிரான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“வேணும்ன்னா உங்க ஓனருக்கு மணிப்பூர்க்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து தாரோம் போகச் சொல்லுய்யா.. “ என்று பிரதமரை மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளனர். இதற்கு எதிராக தமிழக பாஜக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் மறைமுகமாக 2ஜி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த பதிவில், “நாங்க உங்க ஓனருக்கு வேங்கைவயலுக்கு பஸ் டிக்கெட் எடுத்துட்டோம்! போய்ட்டு வந்திட சொல்லுங்க…” என்று தெரிவித்துள்ளார். திமுக மற்றும் பாஜக இடையேயான இந்த சோசியல் மீடியா சண்டை இரு கட்சிகளின் நிர்வாகிகளுக்கு தீனியாக அமைந்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த சண்டை ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..