Asianet News TamilAsianet News Tamil

Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 10 % போனஸ்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Chief Minister MK Stalin orders to give Diwali bonus to Tamilnadu cooperative society workers-rag
Author
First Published Nov 7, 2023, 6:38 PM IST | Last Updated Nov 7, 2023, 6:38 PM IST

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். 

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே  அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

Chief Minister MK Stalin orders to give Diwali bonus to Tamilnadu cooperative society workers-rag

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. 

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios