கமலின் பர்த்டே பார்ட்டினா சும்மாவா... கோலிவுட் முதல் பாலிவுட் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இதையொட்டி சினிமா பிரபலங்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
kamalhaasan Birthday Party
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரையுலக நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி ஒன்றை கொடுத்து அசத்தி இருக்கிறார். அதில் ஏராளாமன பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
Suriya, Aamir Khan, Ravi K chandran
கமல்ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டுள்ளார். அதேபோல் நடிகர் கமலின் தீவிர ரசிகனும், நடிகருமான சூர்யாவும் இந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவின் போது ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுடன் சூர்யாவும், அமீர்கானும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தான் இது.
Parthiban, Aamir Khan
கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனத்தின் தலைவர் சரவணன் கலந்துகொண்டார். அவரை ஆரத்தழுவி வரவேற்ற கமல்ஹாசன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட அற்புதமான புகைப்படம் தான் இது. நடிகர் கமல்ஹாசனை வைத்து பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
AVM saravanan with Kamal
நடிகர் நரேன் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு ஆகியோரும் கமலின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் நரேன் மற்றும் அவரது மகளுடன் கமல்ஹாசன் எடுத்துக் கொண்ட கியூட்டான புகைப்படங்கள் தான் இவை. நடிகர் நரேன் கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
kamalhaasan, Naren
இயக்குனர் பார்த்திபனும் கமலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பாலிவுட் நடிகர் அமீர்கான் உடன் பார்த்திபன் எடுத்துக்கொண்ட அமர்களமான செல்பி தான் இது.
kamalhaasan, Kushbu
கமலின் பர்த்டே பார்ட்டியில் நடிகை குஷ்புவும் கலந்துகொண்டார். அவர் கமலுக்காக ஆசையாக வாங்கி வந்த பூங்கொத்தை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது எடுத்த கேண்டிட் புகைப்படம் தான் இது.
khushbu, ramya Krishnan, suhasini at kamal birthday party
நடிகர் கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரைப்பிரபலங்களுக்கு கொடுத்த பர்த்டே பார்ட்டியில், நடிகைகள் சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... Thug Life Copy Cat: அட கடவுளே மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தின் இன்ட்ரோ வீடியோ இந்த படத்தின் அட்ட காப்பியா?