11:12 PM (IST) Dec 01

மண் என்பதே இறுதி.. நாம் அனைவரும் ஒன்றுதான்.. பருவநிலை உச்சி மாநாட்டில் சத்குரு பேச்சு..!

“நீங்கள் யாராக இருந்தாலும், எதை நம்புகிறீர்கள், எந்த சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்பது முக்கியமல்ல, நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து வந்தவர்கள், அதே மண்ணை உண்போம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு செல்வோம். மண்" என்று கூறியுள்ளார் சத்குரு.

10:40 PM (IST) Dec 01

அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த விஜிலென்ஸ்.. தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கா? இல்லையா?

லஞ்சம் கொடுத்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்வதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

09:45 PM (IST) Dec 01

சென்னையில் மட்டுமல்ல.. மழை காரணமாக இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ !!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

09:10 PM (IST) Dec 01

மிசோரம் சட்டசபை தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதியை அதிரடியாக மாற்றிய தேர்தல் ஆணையம்.!!

மிசோரம்சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை டிசம்பர் 4-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

08:58 PM (IST) Dec 01

ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ குடும்பத்தோடு பயணிக்கலாம்.. விலை இவ்வளவு கம்மியா..!!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் பயணிக்கும் கோமகிஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில், தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

06:51 PM (IST) Dec 01

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : இந்தியாவில் இதுதான் முதல் முறை!

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரைஅமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

06:27 PM (IST) Dec 01

ரூ.20 லட்சம் லஞ்சம்.. வசமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.. அடித்து ஆடும் லஞ்ச ஒழிப்புத்துறை.!!

திண்டுக்கல்லில் டாக்டரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

05:14 PM (IST) Dec 01

புது சிம் முதல் ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் வரை.. டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்ன?

டிசம்பர் 1 முதல், நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

05:13 PM (IST) Dec 01

புயல் கரையை கடப்பதில் புதிய தகவல்!!

புயல் கரையை கடப்பதில் தாமதம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயல் 5ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் - மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4ம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

04:53 PM (IST) Dec 01

பின் இருக்கையில் பயணித்த பெண்.. அத்துமீறிய ரேபிடோ டிரைவர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்.!!

பெங்களூருவில் பெண் ஒருவர் ரேபிடோ டிரைவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

03:04 PM (IST) Dec 01

கூட்டுறவு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

01:53 PM (IST) Dec 01

பெங்களூரு பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

பெங்களூரு பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்

01:19 PM (IST) Dec 01

ராஜஸ்தான் எக்ஸிட் போல்: நம்பும் காங்கிரஸ், நம்பாத பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

12:49 PM (IST) Dec 01

ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் தீர்வு காண நேரிடும்: உச்ச நீதிமன்றம்!

ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் தீர்வு காண நேரிடும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

12:46 PM (IST) Dec 01

புயல் எச்சரிக்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய முதல்வர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சமையல் கூடங்களை தயாராக வைத்திருக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 

12:09 PM (IST) Dec 01

தமிழக அரசின் சீரமைப்பு பணிகள்: 48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் தண்ணீர் - விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழக அரசின் சீரமைப்பு பணிகள் காரணமாக பார்த்திபனூர் மதகணை கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

12:04 PM (IST) Dec 01

Odisha Road Accident: கனரக லாரி மீது வேன் மோதி விபத்து.. 8 பேர் உடல்நசுங்கி பலி.. 7 பேர் படுகாயம்!

ஒடிசாவில் கனக லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

12:03 PM (IST) Dec 01

புரட்சி பாரதம் கட்சியின் முக்கிய பிரமுகர் வெட்டி படுகொலை.. இதுதான் காரணமா? வெளியான பகீர் தகவல்.!

புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் என்பவர் கஞ்சா போதை கும்பலால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12:03 PM (IST) Dec 01

Today Gold Rate in Chennai : அடேங்கப்பா! ஒரு வழியாக குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க முந்துங்கள்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:47 AM (IST) Dec 01

மத்தியப்பிரதேச தேர்தல்: எங்களுக்குத்தான் வெற்றி - அடித்துச் சொல்லும் கமல்நாத், சவுகான்!

மத்தியப்பிரதேச மாநில தேர்தலில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும் என பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்