மண் என்பதே இறுதி.. நாம் அனைவரும் ஒன்றுதான்.. பருவநிலை உச்சி மாநாட்டில் சத்குரு பேச்சு..!
“நீங்கள் யாராக இருந்தாலும், எதை நம்புகிறீர்கள், எந்த சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்பது முக்கியமல்ல, நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து வந்தவர்கள், அதே மண்ணை உண்போம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு செல்வோம். மண்" என்று கூறியுள்ளார் சத்குரு.
துபாயில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உயரிநிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களும், நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்றுகூடும் இந்த கூட்டத்தில் மண்ணைக் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சத்குரு.
“நீங்கள் யாராக இருந்தாலும், எதை நம்புகிறீர்கள். எந்த சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்பது முக்கியமல்ல, நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து வந்தவர்கள். அதே மண்ணை உண்போம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு செல்வோம். மண். மண்ணே இறுதியான ஒருங்கிணைப்பு.
மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் செல்வாக்கு செலுத்துவதிலும், மண் புத்துயிர் பெறுவதற்கான கொள்கைகளை செயல்படுத்துவதிலும் நம்பிக்கைத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்," என்று COP28 இன் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"நம்பிக்கையின் பெயரால் உலகைப் பிரிப்பதாக நம்பிக்கைத் தலைவர்கள் குற்றம் சாட்டப்படும் நேரத்தில், நம்பிக்கைத் தலைவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மண்ணைக் காப்பாற்ற மக்களை ஊக்குவிக்கும் நேரம் இது. நாம் அறியாமலேயே உருவாக்கிய அனைத்துப் பிரிவுகளுக்கும் அப்பால் நம்மை ஒன்றிணைப்பதால், மண் இறுதியான ஒருங்கிணைக்கிறது,” என்றார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக வங்கியின் தலைவர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் அஜய் பங்கா, இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..