லஞ்சம் கொடுத்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்வதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அது குறித்த விசாரணை அமலாக்கத்துறை வந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி 3 கோடி கேட்டு தர மறுத்ததால் 51 இலட்சம் கண்டிப்பாக தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.
மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத் துறையில் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பினார். திண்டுக்கல் தோமையார் புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி காரில் பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மிரட்டி சென்று டோல்கேட் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திவாரி தற்போது மதுரையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. இது ஒருபுறம் இருக்க, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. லஞ்ச வழக்கு விசாரணை விரிவடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டம் மத்திய அரசு அதிகாரிகளை கைது செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. த்திய அரசு ஊழியருக்கு எதிராகத் தமிழ்நாடு விஜிலென்ஸ் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. அந்த குறிப்பிட்ட அதிகாரி லஞ்சம் வாங்கும் பொழுது கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.. அதுவும் நெடுஞ்சாலையில் வைத்து 20 கிலோமீட்டர் துரத்திச் சென்று அவரை பிடித்துள்ளனர். ரசாயனம் தடவிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய அரசு ஊழியரைக் கைது செய்யச் சிறப்பாகச் சிறப்பு நடைமுறை என்று எல்லாம் எதுவும் இல்லை. மத்திய அரசு ஊழியர் என்றாலும் சரி மாநில அரசு ஊழியர் என்று யாராக இருந்தாலும் சரி கைது செய்யப்படும் நடைமுறை என்பது ஒன்றுதான். கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் அது அலுவலக உயர் அதிகாரியிடம் தெரிவித்தால் போதும்.முதற்கட்ட விசாரணை நடத்தத் தமிழ்நாடு போலீசாருக்கு என்று இல்லை அனைத்து மாநில போலீசாருக்கும் அதிகாரம் இருக்கிறது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா
