MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

Today Gold Rate: தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்து வந்தாலும் அதன் மீதான ஆசை மக்களிடையே குறையவில்லை. நகைக்கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இன்றைய தங்கம் விலை

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 15 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை
Image Credit : Asianet News

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் புதிய ஆண்டு பிறந்ததளில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரத்து நெருங்கி வருகிறது. இதனால் திருமணத்திற்காக நகை வாங்குவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்து வந்தாலும் அதன் மீதான ஆசை மக்களிடையே குறையவில்லை. நகைக்கடைகளில் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது.

25
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
Image Credit : Asianet News

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பல்வேறு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள் ஆகியவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்கம் விலை தான் உயர்கிறது என்று பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி.! ஞாயிற்றுக்கிழமை இன்று மற்றும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Related image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
35
நேற்றைய தங்கம் விலை
Image Credit : Asianet News

நேற்றைய தங்கம் விலை

நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,560க்கும், சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ.1,16,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

45
இன்றைய தங்கம் விலை
Image Credit : Asianet News

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (பிப்ரவரி15) நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.116,480ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.14,560ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.15,884ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.127,072ஆக விற்பனையாகிறது.

55
வெள்ளி விலை
Image Credit : Asianet News

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.280,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
வெள்ளி
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
56 நாடுகளுக்கு விசா இல்லை.. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
ரூ.1000 அனுப்பினால் யுபிஐ கட்டணமா? இலவசம் இல்லையா? டிஜிட்டல் பணத்தில் புதிய திருப்பம்!
Recommended image3
மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்.. மார்ச் 16 வரை முக்கிய வாய்ப்பு!
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி.! ஞாயிற்றுக்கிழமை இன்று மற்றும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved