- Home
- Business
- தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Silver Prices Today: வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை, இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது. 4வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

புதிய உச்சத்தில் தங்கம் விலை
ஆண் மற்றும் பெண்கள் உட்பட தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் தற்போதை நிலைமையை பார்த்தால் தங்கம் வாங்குவது என்பது கனவாக போயிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்தை 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் ஏழ்மை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி போடும் தங்கம் வெள்ளி விலை
தங்கம் விலை எப்படி தாறுமாறாக உயர்கிறது பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா குறைந்ததா என்பதை பார்ப்போம்.
நேற்றைய தங்கம் விலை
நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,790க்கும், சவரனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 11) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.1,16,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 15,927ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 127,416ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலக அளவிலான தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அதேபோல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஏற்படும் சூழல் நிலவி வருவதும் மற்றொரு காரணம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

