MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்

போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்

Tomato: மகாராஷ்டிராவில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை சரிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 12 2026, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சமையலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி, வெங்காயம்
Image Credit : Asianet News

சமையலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி, வெங்காயம்

வெங்காயம் தக்காளி சமையலில் இன்றியமையாத ஒன்று. இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்படுத்தப்படுவதால் உள்நாட்டு தேவை மிக அதிகமாக உள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி விலை விளைச்சல் பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து அமைகிறது.

26
தக்காளி வெங்காயம் போட்டா போட்டி
Image Credit : our own

தக்காளி வெங்காயம் போட்டா போட்டி

இந்நிலையில் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் அதிகரித்திருப்பதன் காரணமாக தினமும் லாரி லாரியாக வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் வெங்காய மூட்டையுடன் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து 6 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெங்காயத்திற்கு போட்டியாக பெட்டி பெட்டியாக தக்காளி வரத்தை அடுத்து அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Articles

Related image1
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!
Related image2
பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
36
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
Image Credit : Asianet News

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இதனால் இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் ஓரளவுக்கு குறைந்துள்ளதால் சந்தோஷத்தில் உள்ளனர்.

46
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
Image Credit : google

பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ரூ.250, குடைமிளகாய் ஒரு கிலோ 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 41 முதல் 46 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

56
பை நிறைய அள்ளிச்செல்லும் மக்கள்
Image Credit : our own

பை நிறைய அள்ளிச்செல்லும் மக்கள்

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

66
மாங்காய் கிலோ எவ்வளவு?
Image Credit : Asianet News

மாங்காய் கிலோ எவ்வளவு?

சேனைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 65 முதல் 70 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.55 முதல் 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நூக்கல் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
வெங்காயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!
Recommended image2
ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended image3
சின்னம்மா தலைமையில் ‘புதிய அதிமுக’? டெல்டா சொந்தங்களை கொத்தாக வளைக்கும் சசிகலா - எடப்பாடிக்கு புதிய செக்!
Related Stories
Recommended image1
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!
Recommended image2
பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved