கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த தம்பதியைத் தாக்கி 5 சவரன் சங்கிலையை பறித்தவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பாகலூர் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கராமப்பா (60). விவசாயியான இவரது மனைவி இலட்சுமம்மா (55).  இருவரும் வீட்டின் வெளியே திங்கள்கிழமை தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சிக்கராமப்பாவையும், அவரது மனைவி இலட்சுமம்மாவையும் உருட்டு கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். பின்னர், இலட்சுமம்மா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். அதன் மதிப்பு ரூ.1 இலட்சம் ஆகும். 

தாக்குதலில் பலத்தல் காயம் அடைந்த சிக்கராமப்பாவும், இலட்சுமம்மாவும் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  மகன் சந்திரப்பா பாகலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாகலூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். 

விசாரணையில் தம்பதியை உருட்டுக் கட்டையால் தாக்கி நகையைப் பறித்து சென்றது ஒசூர் ஒன்னல்வாடி அருகே உள்ள ஓ.காரப்பள்ளியைச் சேர்ந்த குல்லப்பா (53) என்பது தெரியவந்தது. 

காவலாளர்கள் அவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட நகையை மீட்டனர்.  குல்லப்பாவிடம் தொடர்ந்து காவலாளார்கள் விசாரித்து வருகின்றனர்.