தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இதுவரை 23 மாநிலங்களில் லோக் ஆயுக்தா நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு அதில்  திருத்தங்களை கொண்டு வர திட்டமிட்டதால் பின்னர் கொண்டு வரலாம் என்று இருந்தோம். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ப்படி லோக் ஆயுதா அமைக்க தயாராக உள்ளளோம்.  அமையும் நாள் எந்த நாள் என்பது அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மானசரோரோவர் செல்ல யாத்திரை சென்றவர்கள் நேபாளம் சிமியோட்டியில் பாதுகாப்பாக உள்ளனர் என ஜெயக்குமார் கூறியுள்ளார். சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  
8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். எங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. மத்திய அரசின் திட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மட்டும் மேற்கொண்டு வருகிறோம்.

எய்ம்ஸ் அமைப்பதற்கான  நடைமுறை ரீதியான பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரி ஆணையம் தொடர்பாக வேறுபட்ட வழியில் கர்நாடகம் சென்றாலும் எந்த அளவிற்கு அது சாத்தியம் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பை 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  8 வழிச்சாலைக்கான அவசியம் உள்ளது. மலைகளின் வளங்களை எடுப்பதற்கே 8 வழிச்சாலை என்பது கற்பனையான குற்றச்சாட்டு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.